| இதுவுமது அஃதாவது இவர்கள் குலத்தலைவனுக்குப் பகையாகிய மாந்தளிரைக் கொணர்ந்தமை யான் ஏற்றிலர் வேறுதழை கொணரின் ஏற்பரெனக் கருதித் தலைவன் வேறுதழை கொணர அதனையும் மறுத்தல். | | மாசின் மணியை வலம்வரும் போதி வனத்தரசின் | | | ஆசின் மணித்தழை யாயினு மேனை யரசைவென்ற | | | காசின் மணியக லல்குலிற் சேர்த்துங் கடனரிதால் | | | தேசின் மணியெறுழ்த் தோளாய் திலகத் திருநுதலே. |
(இ - ள்.) அழகினையுடைய மணித்தூண் போன்ற வலியினையுடைய தோளினையுடையானே! திலகத்தினைக் கொண்ட வழகிய நெற்றியினையுடைய எந்தலைவி குற்றமிலவாகிய மணியினையொத்த இறைவனை (யுகத்துக் கொருமுறை வலமாகவரும்) அரசவனமெனும் திருவாவடுதுறையின்கண்ணுள்ள அரசமரத்தின் (நீ கொணர்ந்த) தழையாக விருப்பினும் (அப்போதி வனத்தின் கண்ணுள்ள (அரசிலையைத் தவிர) ஏனைய அரசமரத்தின் இலையை (தன் வடிவால்) வெல்வியுற்ற குற்றமிளிவாகிய மணிக்கோவையினையுடைய கடிதடத்திற் குடையாகத் தாங்கும் முறைமை யரிதாம். ஆதலின் நீகொணர்ந்த இவ்வரசின் தழையை ஏலேமென்றா ளென்க. (வி - ம்.) மாசின்மணி - மாசிலாமணி. திருவாவடுதுறையிலுள்ள இறைவன் பெயர். போதிவனம் - அரசவனம். திருவாவடுதுறை. இப்போதிவனத்தின் கண்ணுள்ள அரசமரம் யுகத்துக் கொருமுறை இறைவனை வலஞ்செய்தலின் இத்தெய்வத்தன்மை யுடையதழை. நாங்களல்குலிற் சேர்த்தும் தகைமையுடையதன்றென மறுத்தனளென்பார். "அல்குலிற் சேர்த்துங் கடனரிதென்றனள்" என்றார். இதனைப் படரர சென்பர். (280) இதுவுமது அஃதாவது இறைவனைச் சுற்றிப் படர்கின்ற தெய்வத்தன்மை யரசின்றழையாகலின் மறுத்தனர். வேறுதழை கொணரின் ஏற்பரெனக் கருதி வேறுதழை கொணர அதனையும் மறுத்தல். | | காவிரி யாற்றங் கரையானைக் காவெண் கனியுகுக்கும் | | | பூவிரி நாவற் புதுத்தழை யாயினிப் பூதலத்தில் | | | பாவிரி பாவலர் பாவினுங் கேட்டறி யாரெமர்கள் | | | தாவிரி வேல்வலத் தாயது வேற்குந் தகுதியின்றே. |
(இ - ள்.) வலிமை மிகப்பெற்ற வேற்படையை வலப்பக்கத்தேயுடைய தலைவனே! (நீ கொணர்ந்தது) காவிரியென்னு மாற்றின் கரையின் கண்ணுள்ள திருவானைக்காவென்னுந் திப்பிய இடத்தின்கண் வெள்ளிய பழங்களைச் சொரியும் மலர்கள் விரியத்தக்க நாவலின் புதுமையையுடைய தழையாயின் இந்நிலவுலகின்கண் பாக்களைப் பரவச் செய்கின்ற பாவில் வல்ல கவிஞர்கள் பாடும் கவிகளினுள் வைத்தும் எம்மவர்கள் கேட்டறியார்கள். இந்நாவற் றழையை யாங்கள் (கையுறையாக ஏற்றுக்கொள்ளும்) தகுதியின்றென மறுத்தா ளென்க. |