| (இ - ள்.) எனது வெறுக்கத்தக்க மனமே! இடித்தலைச் செய்து மின்னலைத்தந்த நீலநிறம் பொருந்திய மேகம் மழையைப்பொழிந்து தரணியைக் காக்கும் அதுபோல இடியை ஒத்தவன்சொற்கூறி வெள்ளிய நகையின் வனப்பினைக் காட்டிய தோழியானவள் இப்பொழுது அவள் பால் நான் நவின்றனவற்றை முடிவுசெய்து தருதற்கு இனிச் சிறிதும் ஐயமுளதோ இல்லையென்க. (வி - ம்.) புரைதீர்கிளவி நொடித்து எழில்காட்டி என்குறையை முடித்துத்தருதற் கையமுண்டோவென முடிக்க. முன்னர் எள்ளல் நகை காட்டியவள் இப்பொழுது இன்னகை எழில் காட்டினளாதலின் "குறையை முடித்துத்தருவதற் கையமுண்டோ" எனக் கூறினான். எழில்காட்டி - பெயர். தடித்து - மின். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : ஆற்றாமை நீங்குதல். (292) கையுறை புகழ்ந்து காவலனீட்டல் அஃதாவது பாங்கி மதியுடம்பட்டமை யறிந்து தலைமகன் வெள்ளி மலைக்கண்ணும், மேருமலைக்கண்ணும் இல்லையாய் வள்ளிவரையின் பக்கத்தே நேற்றுவளர்ந்த தெய்வத்தன்மையுடைய வேங்கைமரத்தின் கட் பொருந்தியது நுமக்கென்றே உறுதிசெய்துளேன். நீங்கள் விரும்பும் உயர்ச்சியையுடையது : ஏற்பீராகவெனக் கூறாநிற்றல். | | வெள்ளி வரையினு மேரு வரையினும் விண்ணினுமில் | | | வள்ளி வரைநும் புனத்தய னென்னல் வளர்ந்ததெய்வக் | | | கள்ளி வரைதம ருங்கணி வாய்க்கடி யார்ந்ததிது | | | உள்ளி வரைவுசெய் தேனுமர் வீழு முகப்பினதே. |
(இ - ள்.) வெள்ளிமலையிடத்தும், மேருமலையிடத்தும் பொன்னுலகத்து மின்றாய் வள்ளிமலைப்பக்கத்துள்ள நுங்கள் தினைப்புனத்தின் பக்கலிலே நென்னலுளதாகிய தெய்வத்தன்மை பொருந்திய தேனுடன் அழகாகத் தங்கப்பெற்ற வேங்கைமரத்தினிடத்து வாசனை பொருந்தியது இத்தழையாகும். உங்களுக்கென்றே கருதிக்கொண்டு வந்தனன். நும்மவர்விழையும் உயர்ச்சியை யுடையதாம் என்க. (வி - ம்.) கள் இவர் ஐது அமருங் கண்ணியெனப் பிரிக்க. இவர்தல் - விரும்பல். உள்ளி - உங்களுக்கென்றே கருதி. வரைவு - கொள்ளல். இதனை "வரைதலே கொள்ளல்நீக்கல் என்னும் நிகண்டானறிக. உகப்பு - உயர்வு, "உகப்பே உயர்" வென்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : குறைநேர்தல். (293) பாங்கி கையுறை தாங்கினளுரைத்தல் எங்கண்மேல் விரைந்துவந்த வேழத்தானுளவாகிய இடரினீக்கிக் கருணைசெய்த நீ துன்பத்து மூழ்க நீ கொணர்ந்த தழையைக் கையினிடத் தாக்கிக்கொள்ளாது விடினறனாகுமோ, அங்ஙனஞ் செய்யாது விடின் அருளுமாகாதெனக் கூறாநிற்றல். |