| | தாக்கிக் கடுகிய மும்மத வேழந் தனியிடரின் | | | நீக்கிக் கருணைசெய் தாய்நிலை யாத துயரழுந்த | | | நோக்கிக் கடிமலர்ப் பூந்தழை நுன்கைய தெங்கரத்த | | | தாக்கிக் கொளாது விடினற னோவன் றருளுமன்றோ. |
(இ - ள்.) எங்களைத் தாக்குதல்செய்து விரைந்துவந்து யானையா னுளவாகிய துன்பத்தினின்றும் எங்களை நீக்கிக் கருணை செய்தாயாகிய நீ எல்லையிலவாகிய துன்பத்தின் மூழ்கலை யாங்கள் நோக்கி நறுநாற்றத் தினையுடைய மலர்ந்த பூக்களையுடைய தழை நுங்கையிலுள்ளதை எங்கள் கையின் வாங்கிக்கொள்ளாது விடின் அது அறமாகுமோ அல்லது அருளுமாகா தென்க. (வி - ம்.) தாக்கிக் கடுகிய வேழமென்க. தனியிடர் - ஒப்பிலாத துன்பம். ஓகாரம் : தெரிநிலை. நோக்கி - யாங்கள் நோக்கியென்க. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் : குறைநயப்பித்தல். (294) கையுறை யேலாக் கடனிலை யென்று பையர வல்குற்குப் பாங்கி பகர்தல் அஃதாவது தோழி எங்கட்குப் பேருதவிசெய்த நுங்கரத்திலுள்ள தழையை எங்கள் கையின்கண் ஏலாது வாடவிடுதல் அறனோ அதுவுமன்று அருளோ அதுவுமன்று எனக் கூறியவள் சிறிய அரும்பாகிய காலஞ்சென்று விரியும் பருவத்தையுடைய பேரரும்பு சூரியன் முன்னர் விரிதல்போல நம்மாட்டு விழைவுள்ள தலைவன் கனிபோன்ற வாயின்கட் சொற்றோன்றிய கரைந்துருகிய மனம் நல்லரும்போடு கூடிய தழையை நோக்க நல்லநெற்றியையுடைய தலைவியே குழைந்தது ஆதலால் நாந்தழையேலாதுவிடல் கடனன்று எனக் கூறாநிற்றல். | | புல்லரும் பான பருவமெ லாஞ்சென்று போதுகொண்ட | | | மெல்லரும் பாதித்தன் முன்னெகிழ்ந் தாங்குவெய் யோன்கனிவாய்ச் | | | சொல்லரும் பாநிற்குந் தோறுங் கரைந்த துளக்கின்மன | | | நல்லரும் பார்குழை நோக்கக் குழைந்தன்று நன்னுதலே. |
(இ - ள்.) சிறிய அரும்பாகிய காலமெல்லாம் நீங்கி விரியும் பருவத்தைக்கொண்ட பேரரும்புகள் சூரியன் முன்னர் விரிந்ததுபோல நம்மாட்டு விழைவையுடையனான தலைவன் கனிவாகிய வாயின்கண்ணின்று சொற்கள் தோன்றா நிற்குந்தோறும் கரைவுற்ற அசைவற்ற மனமாகிய நன்மைபொருந்திய அரும்பு பொருந்திய தழையினை நோக்க நல்ல நெற்றியையுடைய தலைவியே குழைந்தது ஆதலால் நாமேலாமை முறையன்றென்றா ளென்க. (வி - ம்.) பருவமெலாஞ் சென்று - பருவமெலாம் நீங்கி. வெய்யோன் - விருப்பமுடையோன். வெம்மை - விருப்பம். மனமாகிய நல்லரும்பு அவன் கருத்திலுள்ள தளிரைநோக்கிக் குழைந்ததென்க. அரும்பர் : போலி. அது எதுகைநோக்கி நீண்டது. குழை - தளிர். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : கையுறை யேற்பித்தல். (295) |