| கையுறை யேற்றற்குக் காரணம் விளம்பல் அஃதாவது தழை யேலாதுவிடல் கடனன்றென்றதோழி தலைவியை நோக்கித் தன்னுயிர்கெடினுங் கெடுகவென்று நின்னுயிர் மேல்வந்த யானையினை நீக்குமவர் உயிர்பாற்படாது ஊசலாடவும், கையின்கண்ணுள்ள தளிர்வாடவும், நாம் பார்த்து வாளாவிருத்தல் இயல்பில்லை யென்று கூறாநிற்றல். | | தன்னுயிர் சாயினுஞ் சாய்கவென் றுன்னித் தறுகணொடு | | | நின்னுயிர் மேல்வந்த நீள்கரக் குஞ்சர நீக்குமவர் | | | மன்னுயி ரூசலி னிற்பவுங் கைத்தளிர் மாழ்கவுமிங் | | | கென்னுயி ராரணங் கேபார்த் திருக்க வியல்பில்லையே. |
(இ - ள்.) எனதின்னுயிரன்ன அரிய தெய்வப்பெண் போன்றவளே! தன்னுயிர் கெடினுங் கெடுகவென்று கருதி அஞ்சாமையோடு நினதரிய உயிர் மேன்வந்த நீண்ட கையுடன்கூடிய யானையை நீக்கிய தலைவர் நிலைபெற்ற உயிரானது இருபாற்கவருற்று இடையூசலாடா நிற்கவும், அவர் கையின்கண்ணுள்ள தளிர் வாட்டமடையவும், நாம் வாளாவிருத்தல் இயற்கையன்றென்றா ளென்க. (வி - ம்.) உன்னி நீக்குமவர் என இயைக்க. சாய்தல் - கெடுதல். நிற்கவும் மாழ்கவும் பார்த்திருக்க இயல்பில்லையென்றியைக்க. மாழ்கல் - ஈண்டுவாடல். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : கையுறையேற்பித்தல். (296) ஏற்பதி னேலா மையிற்பழி மிகுமெனப் பாற்படத் தலைவிக்குப் பாங்கி பகர்தல் அஃதாவது தோழி உதவிகூறவும் தலைவி பெருநா ணிழத்தலின் தழைவாங்கமாட்டாது நிற்ப அக்குறிப்பறிந்து வினையின் விளைவைக் கடக்கிற்பவரார் நந்தினைப்புனத்துக் கரியைவென்ற செல்வர் கையின்கணுள்ள தழையை ஏற்பதைக் காட்டிலும் ஏலாமையான் வருங்குற்றம் பெரிதாம். எங்ஙனமெனின் அவர் பனையின்மடலாற் குதிரை புனைந்து யாவருஞ் சிரிப்பப் படர்தரினென்க. ஆதலால் ஏற்றலே சிறந்ததென்றா ளெனக் கூறல். | | வினையின் விளைவினை யார்கடப் பார்விரி பூங்கழலாய் | | | தினையின் வளம்புனந் தீராக் கரிவென்ற செல்வரங்கை | | | நனையின் மணித்தளி ரேற்பதி னூங்கு நவையுளதாம் | | | பனையின் மடல்புனைந் தியாவரு மார்ப்பப் படர்தரினே. |
(இ - ள்.) பூவாற்பொலிந்த கூந்தலினையுடையாய் வினைப்பயனின் முதிர்வை இவ்வுலகின்கண் கடப்பவர்யாவருளர் ஒருவருமிலர்; ஆதலான் வளப்பம் நிறைந்த இனிய தினைப்புனத்தின்கண்ணின்றும் நீங்குதலிலவாகிய யானையைவென்ற செல்வர் அழகிய கையின்கணுள்ள அரும்பினுடன் கூடிய தளிரினை நா மேற்றுக்கோடலா னுளவாம் பழியைக் காட்டினு மேலாமையான் அவர் பனைமடலாற் குதிரைபுனைந்து கண்டார் யாவருஞ் சிரிப்பச்செல்வராயின் குற்றமுளதாமென்க. ஆதலான் ஏற்றலே தகுதியென்க. |