பக்கம் எண் :

1070தணிகைப் புராணம்

கின்ற நின்றொடியணிந்துள்ளனவாகிய கைகள் அவைகளைத் தூக்குதல் செய்து பறிப்ப இயலுமோ குற்றந்தீர்ந்த அனிச்சமலர்கள்படிய வாட்டமுறுகின்ற மணிகள் பதித்த சிலம்பினையணிந்த கால்களையுடைய பாவையினை யொத்தவளே நெருங்கிய நின் கரியகூந்தலின் அணிவதற்கு வாசனையுள்ள பொருள்களை யாராய்ந்து கொணர்ந்தேன் சூடுவாயாக வென்றாளென்க.

(வி - ம்.) கொடியின்கண்ணுள்ள மலர்களையும், கோட்டின்கண்ணுள்ள மலர்களையும் தூக்கிநின் கைகள் பறிப்பனவோ வென்க. கடியவும் - மணமுள்ள ஏனையவற்றையும், மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைமகளை ஆற்றாமை
நீக்குதல்.

(308)

குழாத்திடைத் தலைவியைக் கொண்டுசேறல்

அஃதாவது தோழி மணமுள்ள மலர்களை நின் குழலின்கண்ணே யணிந்தனன். புதர்கள் துணையாகத் தினையினை மேய்ந்துவருடைமான் களினத்துடன் காக்கள்தரும் நீழலிடத்துப் பயில்கின்ற வரையின்கண்ணுள்ள ஆயக்கூட்டத்துள் செல்வாயாகவெனக் கூறாநிற்றல்.

 பூத்தரு கான மணிந்தா லெனப்புதுப் பூங்குழலின்
 ஏத்தரு நாண்மலர் வேந்தே ளிரும்புத ரேதுணையா
 மாத்தரு தீந்தினை மேய்ந்து வருடைநன் மானினத்துக்
 காத்தரு நீழல் பயில்வரை யாயங் கலந்தருளே.

(இ - ள்.) அன்றலர்ந்த பூக்களையணிந்த கூந்தலையுடையவளே! பூக்களை மரங்களோடுகூடிய காடு அணிந்ததையொப்ப புகழ்தற்கருமையாகிய அன்றலர்ந்த மலர்களை நின்குழலின் கண்ணணிந்தனன்; பெரிய புதல்களே துணைக்கருவியாக மாவினைத் தருகின்ற இனிய தினைக்கதிரை மேய்ந்து வருடையும் மானும் தன்னினத்துடனே சோலைகள் தருகின்ற நீழலின்கண்ணே பயில்கின்ற மலையின் கண்ணுள்ள நின் ஆயக்கூட்டத்துடனே கலப்பாயாக வென்றனள்.

(வி - ம்.) வருடையும் மானும் இனத்தோடு தருநிழலிற் பயிலும் வரையென்க. தினைக்கதிரை மேய்தற்கு வருடையும் மானும் இனத்தோடு புதரில் மறைந்து மேய்ந்தன வென்பார். "புதரேதுணையா மாத்தருதீந்தினை மேய்ந்து" என்றார். பூவைக்கான மணிந்தாற்போல குழலிற் பூக்களையணிந்தே னென்பாள், "குழலின்நாண்மலர் வேய்ந்தே னென்றாள். மா பெருமையுமாம். புதல்துணையாக மானும் வருடையும் தினைக்கதிரை மேய்ந்து சோலைநிழலைத் தருகின்ற வரையின்கண்ணுள்ள இனத்தோடு கூடல்போல யான் துணையாகத் தலைவனைக்கூடிய நீ விளையாட்டிடத்தின்கண்ணுள்ள ஆயக்கூட்டத்தினுள் செல்வாயாக வென உள்ளுறையுவமங் கொள்ளக்கிடந்தமை யுணர்க. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைமகளை யாற்றாமை நீக்குதல்.

(309)

முன்ன மறிந்தவள் மன்னவற் குரைத்தல்

அஃதாவது தலைவியை ஆய்த்துய்த்த தோழி தலைவனையணுகி யவன் குறிப்பறிந்து தலைவனே! குறிஞ்சிப்பறை யொலிக்கப் புதியவர் நெருங்க முருகனைக் கொண்டாடுகின்ற விழவினைக் கண்டு இராப்பொழுதை