| தேர்த்தொழில்வல்ல பாகனும் அத்தொழிலில் நீங்குவானாக. புகல் வந்த - யாவரானும் விரும்புதலமைந்த வெனினு மறையும். மெய்ப்பாடு : அச்சத்தைச்சாந்த பெருமிதம். பயன் : விருந்தெதிர்கொண்டு வரைவு பயப்பக் கூறல். (314) பொழுது நீட்டிப்பப் பெற்றொடி தளர்தல் அஃதாவது தலைவன் உட்கோளினைக் குறிப்பானுணர்ந்த தலைவி தலைவன் பிரிந்து காலநீட்டித்தலால் தோழியே கிளியும் மயிலும் பாதுகாத்துத் தம் பேண்ணோடு போதுவனவற்றைத் தம் மலையின் கண் காண்பதரிதாயினும் நஞ்சாரற்கண் அவையங்ஙனம் போற்றிச் செல்வதை யறியார்போலும் அறிந்திப்பின் காலநீட்டியாமல் வருவரெனக் கூறாநிற்றல். (இ - ள்.) தேனின் முழுகப்பெற்ற மலர்களை யணிந்த குழலினை யுடைய தோழியே! வலியினையடைய நந்தலைவர் தமது மலையின் கண்ஒழுகின்ற நிறத்தினையுடைய கிள்ளையும் மயிலும் புனுகு பூனையும், கத்தூரி மிருகமும் தம் பெட்டைகளைப் பாதுகாத்து அப்பெட்டைகளுடன் போதுவனவற்றைக் காண்பதரிது போலும், எழுகின்ற கரிய மேகங்கள் சுழலும் படியான நஞ்சாரற்கண்ணவை அங்ஙனஞ்செல்வதைப் பார்த்தறிந்திலர்போலும்.அறிந்திருப்பின்நாமுந்தலைவியைப்போற்றிச்செல்லவேண்டுமென்று கருதியரைக்கணமுந் தாமதியாது வருவரென்றாளென்க. (வி - ம்.) போதுவன கண்டறிந்திலர் கொல், நஞ்சாரற்கண் அவை அங்ஙனஞ் சேல்வதை அறிந்திருப்பாராயின் யாமுந் தலைவியைப் போற்றிச் செல்வோமென்று அரைக்கணமும் நீட்டிக்காது வருவர் என்பது னுறிப்பெச்சம். வட்டிக்கும் - சுழலும். எய்த்து - அறிந்து மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் - காலநீட்டித்தலால் வருந்தல். (315) துணைவன் வரவு தோழி கூறல் அஃதாவது தலைவன் பிரிந்தமை கருதித் தலைவி வருந்தலைக் கண்டதோழி, பொறியினீங்கி இறைவனை யாராய்கின்ற புருடனைப்போல, நந்தலைவர் தேர்நெறியைக் கடந்து வருவதனைக் காண்பாயாக அவர் குறியினீங்கிச் சுழலுதலைப் பார்த்து நாஞ்செல்வாமென்று தலைவிக்குக்கூறாநிற்றல். | | பொறிவயி னீங்கி யிறைவனை நாடும் புருடனைப்போல் | | | வெறிவயி னார்த்த குழலாய் விரைச்தும் வேந்தர் பொற்றேர் | | | நெறிவயி னீந்தி வருவது காண்டிசி னீள்பொழிற்கண் | | | குறிவயி னீங்கி யரமரல் கண்டு குறுகுதுமே, |
|