பக்கம் எண் :

களவுப் படலம்1075

(இ - ள்.) நறுமணத்தைத் தன்னிடத்துக்கொண்ட குழலினையுடையாய்! நம்முடைய தலைவர் அழகிய தேர் ஐம்பொறியினின்றும் நீங்கி இறைவனிலைடையராய் நின்ற புருடனைப்போல வழியினைக் கடந்து வருவதனை நீ காண்பாயாக. யாம் அவர் நீண்ட சோலைக்கண்ணுள்ள குறியிகிடத்தினின்றும் நீங்கிச் சுழலுதலைக் கண்டு அடைவோமாக வென்றன ளென்க.

(வி - ம்.) காண்டிசின் என்பதில், காண்:பகுதி, இசின்:அசைநிலைது:சாரியை. காண் - காண்பாய் முன்னிலை யொருமையாய் விகுதி புணர்ந்து கெட்டது. நாம் குறியிடத்து நீங்கி நின்னைக் காணாமையால் அவ்விடத்தவன் அலமருதலை யொளிந்திருந்து காண்போம் என்றனள்புருடன் - ஆன்மா. நெறிவயீனீந்தி - (நம் புனத்தின் கட் செலற்குரிய பல கவர்ந்து ) வழியிடத்தையென்க. அவன் அலமருதரலக் கண்டு பின்னர்க் குறிவயிற் செல்வாமென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு:அச்சத்தைச்சார்ந்த பேருமிதம். பயன் : தலைமகன் அலமரல்காண்டல்,

(316)

தாமஞ் சான்ற தாழ்குழற் கிழவி ஏமஞ் சான்ற உவகைக் கிளவி

அஃதாவது புனத்தின்கண்ணுள்ள பலகவர்த்த வழிகளையும் நீங்கித் தலைவன் தேர்வருதலை யுணர்ந்த தலைவி, அணிகலன்களையணிந்ததோழியே! இவ்வுலகத்து மக்களிலொருசாரார் தம்முயிரையும் உடலையும் வருத்துகின்றனர்; தாங்கள் விருந்தினும் பிறர்க்குத் துன்பஞ் செய்யாமை அமரர்க்குரிய நற்பண்பாகும். இவ்விரு பகுதியாருள் நாம் குடத்தினுள் வைத்த சுடர் ஒளியிழந்திருக்குமாறுபோல ஒளியிழந்திருத்தலையறிந்து பொழிற்கண் வந்து தண்ணளிசெய்த நந்தலைவர் எத்தன்மையராவர் என்று கூறாநிற்றல்.

 தாமே தமதுயி ராக்கையும் வாட்டுநர் தாம்பலரே
 ஆமே பிறரை யணங்குறுத் தாமை யமரருக்கும்
 நாமே குடங்கரி னுட்சுட ரேய்ப்ப நலன்கரப்பத்
 தேமே விரும்பொழி னல்குந ரென்னர் திருந்திழையே.

(இ - ள்.) இவ்வுலகத்து மக்களுள் பலர் தாங்களே தங்களுயிரினையும் உடலினையும் வாட்டுகின்றனர். தாங்கள் துன்புறினும் பிறர்க்குத் துன்பஞ்செய்யாமை அமரர்க்குமரிதாகும். இவ்விரு பகுதியினருள் நாங் குடத்தினுளேற்றிய சுடர் ஒளியிழந்திருக்குமாறுபோல நாம் நலனிழந்திருப்ப அஃதறிந்து தேன்பொருந்திய சோலையிக்கண் இன்பினைத் தந்தவர். இவ்விருபகுதியினருள் எத்தன்மையராவர் என்றாளென்க.

(வி - ம்.) உயிரினையும் உடலினையும் வருத்துமவர் துன்பமேயன்றிச் சுகமுணரார். அமரர் சுகமேயன்றித் துக்கமுணரார். நந்தலைவர் நந்துக்பினையுணர்ந்து நமக்கின்பினையளித்தலின் அவ்விருபகுதியினர்போலாது அவரினும் மேம்பாடுற்றவர் என்பாள். ".தேமேவிரும்பொழி னல்குநரென்னர் திருந்திழையே" என்றனள். என்னர் - மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : புகழ்ந்துரைத்தல்.

(317)