| மணிநகைத் தலைவி மறைந்தவற் காண்டல் அஃதாவது தலைவன் தனக்கு நல்கிய இன்பினை உவந்துரைத்த தலைவி தோழியை நோக்கி, நம் தலைவன் தானுற்ற நோயை மணலின்கட் டங்கியும் குழற்குப் பூவினைப் புனைந்தும் தெரிவித்து யானடைந்த நோயினை யறியாது செல்கின்றான். தேர் நெஞ்சமுந் தொடராவண்ண மவ்விடத்துச் சென்றதெனக் கூறாநிற்றல். | | தானுற்ற நோய்வண்டற் றண்மணல் வைகியுந் தாழ்குழற்குத் | | | தேனுற்ற பூக்கொய்து மின்புறச் சேர்ந்துந் தெரித்துமற்றிங் | | | கியானுற்ற நோயறி யாதயர்ந் தேகுகின் றார்மணித்தே | | | ரானுற்ற தாற்றொடர் நெஞ்சுமெட் டாமை யலர்முலையே. |
(இ - ள்.) பரந்த தனங்களையுடைய தோழியே! என்னைப் பிரிந்தமையால் தானுற்ற நோயினை வண்டலாட் டயர்கின்ற குளிர்ந்த மணலையுடைய பொழிற்கட்டங்கியும், எனது தாழ்ந்த குழலினுக்குத் தேனொடு பொருந்திய மலர்களைக் கொய்து அணிதலைச்செய்தும், இன்பினை நுகர்ந்து எனக்குத் தெரிவித்தும் இவ்விடத்து அவன் பிரிவால் யானடைந்த நோயினைச் சிறிதும் அறியாமல் செல்கின்றான். தேர்மனமுந் தொடர்ந்து செல்லாவண்ணம் அவ்விடத்துப் பொருந்திய தென்க. (வி - ம்.) என்னைப் பிரிந்தமையான் தனக்குளவாகிய நோயினைப் பொழிற்கட்டங்கியும் பூக்கொய்தணிந்தும் தெரிவித்தும் என் இன்பினை நுகர்ந்த அவன் எனக்குளவாய நோயினையறியாது சென்றான் என்பாள். "யானுற்ற நோயறியா தயர்ந் தேகுகின்றான்" என்றாள். தேர்தொடர நெஞ்சுமெட்டாமை யாண்டுற்ற தென்பாள். "ஆனுற்றதாற் தொடர் நெஞ்சுமெட்டாமை" என்றாள். மற்று : அசைநிலை. ஆன் - அவ்விடம். தலைவன் என் துன்பத்தை யறியாராயினும் யான் அவன் துன்பினையறிந் தின்பளித்தே னென்றாளென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : பிரிவச்சம். (318) தலைவி நீட்டிப்பத் தலைவன் மெலிதல் அஃதாவது தலைவன் சேறலை மறைந்து கண்ட தலைவி குறியிடஞ் செல்லாது காலநீட்டிப்பத் தலைவன் ஆகாயத்தின்கட் பரவிய விண்மீனின் நடுவண் கலைமதிக் கடவுள்போல ஆயக்கூட்டத்தார் பரந்த நடுவிடத்திற் பொருந்தி வண்டலாட்டயர்ந்து உரிமையோடு பொருந்தி நம் அரியவுயிர் தங்கியது மடைக்கண் நீர் பரவியதுபோலச் செல்வாய் நெஞ்சே நீயிவண் வருதலைக் கருதினாயல்லையெனக் கூறாநிற்றல். | | காயம் பரந்த வுடுக்களி னாப்பட் கலைமதிபோல் | | | ஆயம் பரந்த நடுவட் குலாய்வண்ட லாட்டயர்ந்து | | | தாயம் பரந்தநம் மாருயிர் வைகிற்றுத் தாழ்மடைக்கண் | | | தோயம் பரந்தெனச் சேறிநெஞ் சேவரல் சூழ்ந்திலையே. |
(இ - ள்.) நெஞ்சமே! வானின்கட் பரவிய விண்மீன்களின் நடுவட்டங்கி கலைகள் நிறைவுற்ற வெண்கதிர்க் கடவுள்போல ஆயக் கூட்டத்தார் பரந்த நடுவிடத்து வண்டல் விளையாட்டைச்செய்து |