பக்கம் எண் :

களவுப் படலம்1077

உரிமைபொருந்திய நம் அரிய உயிர்வைகியது தாழ்ந்த மடைத்தலை யிடத்து நீர் பரவியதுபோல அத்தலைவியின்மாட்டு நீ செல்வாய்; அவளிடத்தினின்றும் என்பால்வர நீ நினைக்கின்றா யில்லை. இஃதென்னை ஆச்சரியமென்க.

(வி - ம்.) வானத்திற்குப் புனத்தையும் நாண்மீனுக்கு ஆயவெள்ளத்தையும் மதிக்குத் தலைவியையும் உவமமாகக் கொள்க. தாயம் - உரிமை. தோயம் - நீர். உடு - விண்மீன். மெய்ப்பாடு : பிறன்கட்டோன்றிய இளிவரல். பயன் : தலைவியை நீங்கலான் வருந்தல்.

(319)

மற்றிணி தோளான் பெற்றுள மலிதல்

அஃதாவது தலைவி நீட்டிப்ப மெலிந்த தலைவன் யான் புனத்தின் பக்கத்தே வருதலையறிந்து உயிர்த்தோழி நல்லாய் புனத்தினைக் கிளிகள் அழிக்கின்றதெனக் கூறத் தலைவி கூவிக்கொண்டு குறுகாநிற்ப, அக்கிளிகள் பரவாநிற்கும் இக்கிளிகள் என்மாட்டுச் செய்த நன்மை யெத்தன்மையானது. இப்பொழிலிடத்துக் கீழ்மக்கள்போல் யான் வருந்து வதின்றெனக் கூறாநிற்றல்.

 கிள்ளைசெய் நன்றியென் னேயுயிர்த் தோழி கிளந்துவிட
 வள்ளைசெய் வாள்விழி மாதர்நல் லாள்வள ரேனலெலாம்
 கொள்ளைசெய் கின்ற தெனக்கூய்க் குறுகப் பரத்தருமால்
 தொள்ளைசெய் மாந்தரின் மாழ்குவ தின்றினிச் சூழ்பொழிற்கே.

(இ - ள்.) உயிரினையொத்த தோழியானவள் (தலைவன் வருகையை யறிந்து) வள்ளைக்கொடி போலும், காதுவரை ஓடுதல் செய்யும் விழியினையுடைய கண்டார்க்குக் காதலைத் தரத்தக்கவளே. வளர்கின்ற ஏனற் கதிர்களையெல்லாம் கொள்ளையிடுகின்றன. (கிளிகள் யாவும்) என்று கிளந்து சொல்ல (அதனை அறிந்த) தலைவி ஆலோலம் என்று கூவியணுக அக்கிளி பரத்தலைச் செய்யாநிற்கும் ஆதலால் இக்கிளிகள் செய்த உதவியை யான் என்னென்பேன். இனிக் கீழ்மக்களைப்போல இப்பொழிலினிடத்து வருந்துத லின்றென்றா ளென்க.

(வி - ம்.) தலைவன் புனத்தின் பக்கலில் வருதலையறிந்து தோழி குறிப்பானறிந்து தலைவி யாண்டுச்செல்லும் வண்ணம் "நல்லாய் வளரேனலெல்லாம் கொள்ளைசெய்கின்றது" எனக் கூறினாள். அக்குறிப்பறிந்து தலைவி தினைப்புனத்தைக் கிளிகள் அழிக்கின்றனவென்று ஆயத்தார்க்கு மாயஞ்செய்து நீங்கித் தலைவனை யடைவாளென்பார் "கொள்ளை செய்கின்றதெனக் கூய்குறுக" வென்றார். ஆயத்தினின்றும் நீங்கித் தலைவி தனியே வருதற்குக் காரணங் கிளிகளானமையால் "கிள்ளை செய்நன்றியென்னே யென்றான்." மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : பெற்றுளமலிதல்.

(320)

மருமலர்க்குழலி யருமை செய்தயர்த்தல்

அஃதாவது தலைவன் தலைவியைப்பெற் றுளமகிழ்ந்த பின்னர்த் தலைவி தீங்குசெய்தாரையும் ஒறுக்கிற் பார் நம்மைத் துறத்தலின் நாம் அரியேமாகியது பற்றித் தாமும் அரியராயினார்போலும் எனத் தோழியை