பக்கம் எண் :

1080தணிகைப் புராணம்

 சொல்லுவ தீதென் றுணர்வாள் கொடுஞ்சொற் சுமந்தலரோ
 புல்லுவ தாலென்று நாணிநிற் பாட்குப் புகழ்மருந்தாய்
 ஒல்லுவ தேனுந் துயவறி யாவொரு நீபுரையச்
 செல்லுவ தானின் கரந்தொட மாழ்கிய தேந்தழையே.

(இ - ள்.) தலைவனே நின் கைகள் தீண்டலால் வாட்டமுற்ற நறுநாற்றத்தையுடைய தழையை (வாங்கலான் அயலார் கூறும்) கொடுஞ்சொற்களைச் சுமந்து பலர்கூறும் பழிமொழியும் பொருந்துவ தாகுமென்று (அத்தழை வாங்காது) நாணமுற்று நிற்கின்ற தலைவிக்கு (அத்தழை) பலரும் புகழ்தற்கேதுவாகிய (காமநோய் நீக்கும்) மருந்தாகப் பொருந்துவதாயிருப்பினும் பிறர் துன்பினைப் பகுத்தறியாத ஒப்பற்ற நீ எங்ஙனம் கூடிப்பிரிகின்றனையோ அங்ஙனமே (அத்தழையும்) கூடிப் பின் வாடுந்தன்மை யுடையதாதலின் யாம் வாங்கேம். (தழை வாங்கும்பொருட்டு) நீ கூறுவனவாகிய சொற்களைத் (தலைவி) தனக்குத் தீமைபயப்பனவென வறிவா ளென்க.

(வி - ம்.) தீது - தலைவிக்கு மேன்மேலும் காமத்தையளித்து அலர் பரப்பல். இனிச் சொல்வது ஈதென்றுணர்வாள் எனப்பிரித்து யான் தழை வாங்கிக்கொள்ள வேண்டுமென்று தலைவியினிடத்திற் சொல்வதை அத்தலைவி இஃதாகும் இஃதாகாதென்று பகுத்தறிந்து கொள்ளும் எனப் பொருள்கொள்ளினும் பொருந்தும். துயவு - வருத்தம். நீ கூடின காலத்தின்பினையும் பிரிந்த காலத்துத் துன்பினையும் நீ யளித்தல்போல தழையை ஏற்ற காலத்தின்பும், அவை வாடுங்காலத்துத் துன்பும் தருதலின் "ஒருநீபுரையச் செல்லுவதானின் கரந்தொட மாழ்கிய தேந்தழையே" என்றார். மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் : கையுறை மறுத்தல்.

(324)

 அருமையிற்றலைவ னாற்றிய வெட்டும்
 பெருமையிற்றலைவி பிறைநுதற் கியம்பல்

அஃதாவது கையுறை மறுத்த தோழியுடன் தலைவியருமையாகத் தலைவன் இடந்தலைப் பாட்டின்கண் தலைவன் தன்மாட்டு நிகழ்த்திய வெட்டினையும் தோழிக்குக் கூறாநிற்றல்.

 வாணுத னீவு மயிலெனுந் தாழு மலிவியெனும்
 காணுத னீடுமென் றேங்குங் கரைந்த கருத்தறியும்
 பேணுத னோக்கும் பிரியாமை காட்டுமப் பெற்றியனால்
 கோணுதல் யாது நிகழ்ந்தின்று பெண்மையிற் கோற்றொடியே.

(இ - ள்.) திரண்ட வளையினையணிந்த தோழியே தலைவன் எனது ஒளிபொருந்திய நுதலினைத் தடவுவான், மயிலெனப் புனைந்துரைப்பான், என்னை வணங்குவான், நிறைந்த கருணைசெய்யென்று சொல்வான் என்னைத் தான்காண்டல் நீட்டிக்குமென்று வருந்துவான். யான்கூறிய மொழிகளின் கருத்தை யறிவான். (என்னை) விருப்பத்துடன் நோக்குவான், (என்னினின்றும் தான்) பிரியாமையைக் காட்டுவான். இத்தன்மையாய குணங்களான் மக்களுக்கியல்பாகவுளவாம் நாணம் மடம்