பக்கம் எண் :

களவுப் படலம்1083

தனக்கணியாகக் கொண்டு உயர்ச்சிபொருந்திய மலையின்கண்ணுள்ள இடத்தில் (நெடுங்காலமாக) வாழ்வார் எம்மவர். எந்தலைவி வேடர்குடியிற் பிறந்து (எங்கள் குலத்தொழிலாகிய) புனங்காத்தலையும் நீ யறிந்துள்ளாய் ஆதலால் யான் இழிந்த வேடன் நீங்கள் தேவமாதரென மறுத்தல் தகாதெனக் கூறினளென்க.

(வி - ம்.) நீ கூறியவண்ணம் எம்மவர் தேவர்களல்லர், உன்னை யொத்த மலைவாழ்நரே என்பாள். "வெற்பகச் சூழலின்வாழ்நர்" என்றனள். நீ தேவப் பெண்ணென மறுத்துத் தினைப்புனத்து அவளைக் கூடி இன்பமடையலாம் எனக் கருதுகின்றாய். இவள் வேறுபாடு கண்டு எம்மவர் இற்செறிக்கவுங் கூடும் ஆதலான் இனியவளைத் தினைப்புனத்தினுங் காணற்கியலாது வரைந்து செல்லுதலே தகுதியென்பாள். "புனங்காவலறிந்தனையே" என்றாள். எந்தலைவியால் நீ பெரிதுங் காதலிக்கப்பட்டனை யென்பாள். "விரைப்பூங்குழலாள் அற்பகச் சூழ்ச்சியினாய்" என்றாள். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வரைவுகடாதல்.

(328)

வரைவெமர் சூழ்வரென வரைவு கடாதல்

அஃதாவது நீ மறுத்தல் தகாதென வரைவுகடாய தோழி நீவரின் எம்மவர் அவள் வேறுபாடு கண்டு சந்தமும் அகிலும், குங்குமமும், இவைகள் முதிருமாயின் முற்பட்டவர் அதனைக் கோடுமுறையினை யுடைய மலைப்பக்கத்துப் பொருந்தும் தாய் தினைகாப்பவர் யாரையென்றாள். நான் நம் பாவை யென்றேன். அவ்விடத்து நின்றாராய்ந்து நீற்றினையளித்துக் கண்ணூறினை நீக்கினள் எனக் கூறாநிற்றல்.

 சந்தனங் காரகில் குங்கும மின்னன தாமுதிரின்
 முந்தினர் கொள்ளு முறைமழைச் சாரலின் முன்னுமன்னை
 பைந்தினை காப்பவள் யாரையென் றாணந்தம் பாவைகொலென்
 றந்தினின் றாய்ந்துகண் ணூறழித் தாளணி நீறளித்தே.

(இ - ள்.) சந்தனமுங்கரிய அகின்மரமும் குங்கும மரமும் (பயன் படுதற்குரியனவாய்) முதிர்ந்தால் முற்பட்டுப் பார்த்தவர் கொள்ளு முறைமையினையுடைய மேகங்கள் தங்கப்பெற்ற மலைப்பக்கத்தின்கண் சென்ற எங்களன்னையார் (என்னை நோக்கி அவள் வேறுபாடுகண்டு) பசிய தினைப்புனத்தைக் காவல் செய்பவள் யாரென்று வினவினள். (யான்) நமது பாவையை யொப்பா ளென்றனன். (அவள் முதுக்குறைந்து உறுப்புக்கள் வேறுபட்டிருத்தலையோர்ந்து நீற்றினைக் கொடுத்து (பிறர்) கண்ணாலூறுபாட்டினை நீக்கினளென்றா ளென்க.

(வி - ம்.) சந்தனமும் பிறவும் முதிர்ந்தால் எங்கள் மலைநாட்டில் முற்பட்டவர் கொள்வதுபோல எந்தலைவி முதுக்குறைவுற்று வேறுபாடடைந்திருத்தலின் வேறொரு தலைவன்வந்து வரைவதற்குமுன் நீ வரைந்துகொள் என்பாள். "சந்தன..... முதிரின் முந்தினர் கொள்ளு முறை மழைச்சாரல்" என்றாள். அன்னைதினை காப்பவள்யாரை யென்றாள். யான் நம்பாவை யென்றனன். அவள் ஆராய்ந்து இவள் வேறுபாடுகண்டு இவளைப் பிறர்காண்டலானுளவாம் விழியூற்றினை நீறளித்து நீக்கினாளென்பாள். "அந்தினின்றாய்ந்து கண்ணூறழித்தாளணி