| | பைந்தா ரகலத்துப் பார்த்திப ரென்றுநம் பைம்பொழில்வாய் | | | வந்தாரந் நாண்முத லாவள ரேன னுமக்கிரையாச் | | | செந்தார்ப் பசுங்கிளி காண்மயில் காள்செல்ல விட்டனமே | | | முந்தார்ப் பொடும்விலங் குற்றிலிர் மொய்ம்பர்முன் னாவகையே. |
(இ - ள்.) செந்நிறத்தோடு கூடிய ஆரத்தினையுடைய பசிய கிள்ளைகாள் மயில்காள் பசிய மாலையையணிந்த இறைவர் எஞ்ஞான்று நமது பசிய பொழிற்கண் வந்தனரோ அந்நாண் முதற்கொண்டு வளர்கின்ற ஏனற் கதிர்களை நுங்களுக்கு இரையாகவிட்டோம். (யாங்கள் அங்ஙனம் விட்டிருப்பவும்) வலியினையுடைய தலைவர் (பிரியும் காலத்து) முந்திச்சென்று செலவை அவர் முன்னாதவகையில் ஆரவாரத்தோடு தடை செய்திலீர் என்க. (வி - ம்.) பார்த்திபர் என்று வந்தார் அன்றே ஏனற் கதிர்களை நுமக்கு இரையாகவிட்டிருப்பவும் தலைவர் பிரியுங்காலத்துத் தடைசெய்திலீர். ஆகையால் நீவிர் செய்ந்நன்றி யறியீர்போலும் என்பது குறிப்பெச்சம். தார் - கிளிகளின் கழுத்திலுள்ள செந்நிறவரை. இனி மொய்ம்பர் என்னை முன்னாவண்ணம் அவர் மலையின்கண்ணுற்றிலிர் போலும். இப்பொருட்கு விலங்கு மலையெனப் பொருள்கொள்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : செறிப்பறிவுறுத்தி வரைவுகடாதல். (334) கச்சிள வனமுலையவள் அச்சமிக் குரைத்தல் அஃதாவது புள்ளினைநோக்கி எள்ளி உள்ளுடைந்த தலைவி இலையுணவு ஓரிடத்து உண்பதின்றி எங்கும் தாம் விரும்பியவாறு வரையாடுகள் ஆராய்கின்ற தம்மலையினுக்குத் தேரினையுடையார் மீளுதலுளவாயின் யான் தொழுந்தெய்வம் என்னுயிரை அல்லல்பூணாது காக்க வெனக் கூறாநிற்றல். | | ஈண்டிய வான்குள கோருழி வாய்ப்பெய்வ தின்றியெங்கும் | | | வேண்டிய வாறு வருடைக டேருந்தம் வெற்பினுக்குத் | | | தூண்டிய தேரினர் மீட்சியுண் டேற்றொழு தெய்வமல்லல் | | | பூண்டிய லாது விரிச்சியிற் காக்கவென் புல்லுயிரே. |
(இ - ள்.) கடாவுந் தேரினையுடைய தலைவர் நெருங்கிய மேலான இலையுணவு ஓரிடத்தில் வாயானுண்ணுவதின்றி எல்லாவிடங்களினும் தாங்கள் விரும்பியவண்ணம் வரையாடுகள் ஆராய்ந்து (உண்ணுகின்ற) தமது மலையினுக்கு அவர் மீளுதலுளதாயின் யான் வணங்குந் தெய்வம் என்னுயிர்த் துன்பத்தை மேற்கொண்டியலாது நற்சகுனத்தால் காக்க ; இல்லாதுவிடின் தலைவர் பிரிவால் நான் இறந்துபடுவேன் என்றாளென்க. (வி - ம்.) தேரினர் மீட்சியுளதாயின் என்னுயிர் அல்லலைமேற்கொண்டு செல்லாது காக்கவென முடிக்க. தலைவன் பிரிவால் நான் இறந்துபடுவேன் என்பது குறிப்பெச்சம். குளகு - இலையுணவு. வாய் பெய்தல் - உண்ணுதல். வருடை - வரையாடு. மீட்சி - செலவு. காக்க : வியங்கோள். நெருங்கிய இலையுணவு ஓரிடத்திருப்பினும் அதனை |