| (இ - ள்.) நெஞ்சமே. (நம்முடன்) கூடாதவரிடத்துத் தீங்கு செய்பவரை (உலகினர்) கொடியரென்று சொல்லுவார்கள். விட்டுப் பிரியாதவரிடத்து (பிரிந்து) தீங்கு செய்பவர்களை (அவர்களே) கலந்து (அவர் கொடுமையை) அறியாராவர். அத்தலைவரை ஆராயாத மக்கள் நல்லவரென்று ஏத்தெடுப்பினும் அத்தலைவரைக் கூடினவர்கள் வாட்டமடையாதவர்களில்லை. வாட்டமுடையாரே யாவர் என்க. (வி - ம்.) விட்டுப்பிரியாது கூடியிருந்த என்னைப் பிரிந்து தீங்கிழைத்தார் என்பாள் "வீடாதவரைத் தீங்கிழைத்தாரை விராயறியார்" என்றாள். அத்தலைவர் இயற்கைக்கு எங்களை யாராயாதவர்கள் நல்லரென்று கூறினும் அவர் வருத்தமுறுதல் ஒருதலை யென்பாள். "அன்னாரைமரீஇ யவர்வாடாதவ ரல்லராவர்" என்றனள். வீடாதவரென்பது விகாரம். மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (337) பலவுமெண்ணி யலர்முலை யிரங்கல் அஃதாவது தலைவன் கொடுமைகூறிய தலைவி அழகானது பசலை கொண்டது காதலரை அவர் அறிய நாடு தடுத்தது. இங்ஙனம் யான் தனித்த நிலைகண்டு அச்சம் பொருந்திய துன்பம் பிணித்துக்கொண்டது. நிலத்தோர் நாவிற்பொருந்திய தீச்சொல் இறுமாப்புற்ற உள்ளத்தைப் பிணித்தது எனக் கூறாநிற்றல். | | காமரு மாமை பசலைகைக் கொண்டது காதலரைத் | | | தாமரு நாடு தகைத்ததென் னோவித் தனிமைகண்டு | | | பேமரு பீழை பிணித்தது வல்லே பெருநிலத்தோர் | | | நாமரு தீச்சொ லிறுமாப் புளத்தை நலிந்ததுவே. |
(இ - ள்.) கண்டார்க்கு விருப்பம் வரத்தக்க அழகைப் பசலையென்னும் குணம் கைப்பற்றியது. (நம்மாட்டு) காதலுடைய தலைவரை தாம் (இருக்கும்) அரிய நாடானது தடுத்தது. என்ன காரணமோ யானறியேன். (யானிங்ஙனம்) தனிமை யுறலைக் கண்டு அச்சம்பொருந்திய பீழையானது பிணித்துக்கொண்டது. பெரிய நிலத்தின்கண்ணுள்ள மக்களின் நாவினிடத்துப் பொருந்திய தீச்சொற்கள் இறுமாப்பினையுடைய உள்ளத்தை வருத்தியது ஆதலால் நாம் செய்வது யாது என்றாளென்க. (வி - ம்.) அவர் பிரிவால் அழகுநீங்கப் பசலையுளதாயிற் றென்பாள். "காமரு சாயல் பசலைகைக் கொண்டதென்றாள்" மாமை கொண்டது. நாடு தகைத்தது, பீழைபிணித்தது, தீச்சொல் இறுமாப்புளத்தை நலிந்தது என முடிக்க. ஆதலால் நாம் செய்வது யாது என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (338) | | இதுவலதென்பா லெய்துவதெவனென | | | விதுநுதற் றோழிக்கு மெலிவொடு கிளத்தல் |
அஃதாவது பலவுமெண்ணி இரங்கிய தலைவி மதிநுதற் றோழியை நோக்கி அணிந்தமலரும் பருகிய குடையும், நாணுணப்பட்ட மங்கை |