| யாரும் ஆராயுங்காலத்து ஒப்பார் என்னாது தலைவர் தன்னகரில் நீடித்து வாழும் வாழ்வை நினைந்து தங்கினர். நிறையைத் தாங்கலாற் றளர்ச்சி யுறுவேன் வாட்டமுற்று ஆவியல்லவோ புறத்தே செல்வதெனக் கூறாநிற்றல். | | சூடிய பூவும் கருகிய வோலையுந் தோகையரும் | | | நாடிய காலை நிகர்ப்பரென் னாதன்பர் தந்நகர்வாய் | | | நீடிய வாழ்க்கை நினைந்துவிட் டானிறை தாங்கிநைவேன் | | | வாடிய வாவியன் றேபுறம் போவது வாணுதலே. |
(இ - ள்.) ஒளிபொருந்திய நெற்றியையுடைய தோழியே. (ஒருவர் கூந்தலின்கண்) அணிந்தமலரும் (ஒருவர்வேணீர்) பருகிய குடையும் (ஒருவனால் இன்ப நுகரப்பட்ட) பெண்மகளும், ஆராயுங்காலத்து ஒப்பாவர் என்று கருதாது (நம்மாட்டு) அன்பினை யுடையார் தம்நகரின் கண்ணே நீட்டித்த வாழ்வினை நினைந்து தங்கிவிடுவராயின் நிறையென்னும் குணத்தினை மேற்கொண்டு வாட்டமுற்ற எனதுயிரல்லவா புறத்தே செல்கின்ற தென்றா ளென்க. (வி - ம்.) சூடினரிட்ட பூவையும், தண்ணீர்வேட்கை யான் ஒருவர் நீருண்ட குடையினையும் மற்றவர் தீண்டாதவாறுபோல ஒருவர் தோணலமுண்டு துறக்கப்பட்ட மாதரைப் பிறர் தீண்டாராகையான் அதுபோல என்னையும் மற்றைய ஆடவர் ஒருபொருளாகக் கருதார் என்பாள். "சூடியபூவும், பருகியவோலையும் தோகையரும், நாடியகாலை நிகர்ப்பர்" என்றாள். இதனை 23-ஆவது பாலைக்கலியுட் காண்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (339) கருத்தழி கிழத்தி கலங்கி மொழிதல் அஃதாவது இதுவலது என்னிடத்தி லெய்துவது வேறென்ன வென்று தோழிக்குக் கூறிய தலைவி விடம் நீங்குகின்ற காலத்து அராமெலிந்திருக்கு மாறுபோல மெலிந்த என் மெலிவைத் தணக்கச் சென்ற மனமானது தலைவர் அருள்செய்யாமை கண்டு நான் தலைவியினிடத்துச் செல்லின் அவளோடு துன்பினை யடையவேண்டுமென்று கருதுதலினாலோ என்பால் வரவில்லை யென்று கூறாநிற்றல். | | விடங்கழி காலத் தராவென வென்மெலி வைத்தணப்பான் | | | இடங்கழி வாம்பரித் தேரோ னுடன்சென்ற வேழைநெஞ்சம் | | | மடங்கழி காதன்மை மல்கக் கருணைவை யாமைகண்டங் | | | குடங்கழி வேன்கொலென் றுன்னலி னாங்கொ லுறாநிலையே. |
(இ - ள்.) (தன்பாலுள்ள) நஞ்சினைக் கழிக்கின்ற காலத்து அரா மெலிவடையும் வண்ணம்போல (அவர் நீங்கினமையானுளவாம்) மெலிவினை நீக்கும்பொருட்டுப் போர்க்குரிய வாவிச்செல்கின்ற பரிபூட்டிய தேரினையுடைய தலைவனுடன்போய அறியாமையோடு கூடிய என் நெஞ்சமானது அறியாமை மிகுந்த காதலானது நிறைய (தலைவர் என்பால்) தலையளி செய்யாமையறிந்து (நான் இனித் தலைவிபாற் செல்லின் |