| அவளுறுகின்ற துன்பினை யானுமுற்று) ஒருசேர அவளுடனழிவேனென்று நினைத்தலினானாகும் போலும் (அந்நெஞ்சம்) நம்மிடத்துப் பொருந்தாத நிலையென்றா ளென்க. (வி - ம்.) இடங்கழி - நெருங்கிய என்றும் பொருள்படும். சீபரி பூரணநாமப் படலத்தில் "வெல்லவலனேல் படைகொண் டிடங்கழிப்பல்" என்றார். இடங்கழி - போர். மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (340) மற்காட்டு தோளார்க்குத் தற்காட் டுறுத்தல் அஃதாவது கருத்தழிந்து கலங்கி மொழிந்த தலைவி முற்பிறவியின் மிகுதியாகத் தவத்தினைச் செய்யாது வீணாகப்பிறந்த என்பொருட்டு இப்பிறப்பின்கண் எவர் இப்பொன்னிறத்தைத் தலைவி யடைந்தனளென்று வருபிறப்பின்கண் ஒருசேரப் பிறத்தலைத் தெளிவித்து என்னை நீங்கினவர்க்குச் செவ்விதாக அதனைக் காட்டிச் செப்புவர் எனக் கூறாநிற்றல். | | அம்மையி னாரத் தவம்புரி யாதவ மேபிறந்தேற் | | | கிம்மையின் யாவ ரிதனிறம் பெற்றன ளேந்திழையென் | | | றும்மையி னாங்கு முடங்குற றேற்றி யொழிந்தவர்க்குச் | | | செம்மையி னாங்கப் பசும்பொன்னைக் காட்டுபு செப்புவரே. |
(இ - ள்.) தாங்கிய அணிகலன்களை யணிந்த தலைவி முற்பிறப்பின் கண் மிக்க தவத்தினை இயற்றாது வீணாகப் பிறந்த என்னிமித்தம் யாவர் (நின்பிரிவால் தலைவி) இப்பொன்னிறத்தை யடைந்தனளென்று (இனிப் பிறப்புளதாயின்) வருகின்ற அப்பிறப்பின்கண்ணும் (நீ தலைவியாகவும் நான் தலைவனாகவும் பிறந்து கூடுவோமென) ஒன்றாதலைத் தெளிவித்துப் பிரிந்த தலைவற்கு செப்பமாக அப்பொன்னைக் காட்டியாவர் செப்புவர் என்க. (வி - ம்.) தற்காட்டுறுத்தல் என்பது தன்னைத் தலைவன் காணாவகை யொழுகினும் தன் பொலிவழிவினை அவற்குக் காட்டல். இது - பொன். யாவர் செப்புவரென்க. அம்மை - முற்பிறப்பு. உம்மை - வருபிறப்பு. இதன் கருத்து பசலைநோயுற்றிருக்கின்றாளென்று யாவர் சொல்வரென்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (341) மையுறு கண்ணி கையறு கிளவி அஃதாவது தன்னைத் தலைவன் காணாவகை நாணான மறைந்தொழுகினும் தன் பொலிவழிவைக் காட்டிய தலைவி அன்றிற் பறவைகளே முதிர்ச்சியுற்ற பிரிவாகிய நோயினை நீங்களறிந்திருப்பின் வருந்திய எந்நிலைமையினை யறிந்து வைத்தும் என்னைவந்து கூடாத தலைவரைப் போன்று நீவிர் இருக்கமாட்டீர். என் கைவளையைக் கொண்டுசென்று தங்குகின்றவர் ஊரின்கண்ணே சென்று இங்ஙனமிருத்தலடாதென்று சொல்லு நீவிர் அறியாதிருத்தல் என் தீவினைப் பயனெனக் கூறாநிற்றல். |