| | முயங்கிய வண்சிறை யன்றின் முதிர்பிரி நோயறியின் | | | உயங்கிய வென்னிலை கண்டு முறாரி னிருக்ககில்லீர் | | | கயங்கிய கைவளை கொண்டகன் றார்தவி ரூரின்வல்லே | | | இயங்கி யடாதென்பிர் நீயிரெய் யாமையென் றீவினையே. |
(இ - ள்.) ஒன்றினோடு ஒன்று பொருந்திய வளவிய சிறையினையுடைய அன்றிற் பறவைகளே (அவர்) பிரிவான் (நானடைகின்ற) முதிர்ந்த நோயினை (நீங்கள்) அறிந்திருப்பின் வருந்திய எந்நிலைமையினைக் கண்டுவைத்தும் (என்னிடத்து) வந்துசேராத தலைவரைப்போல இருக்கமாட்டீர்கள். விளக்கமுறுகின்ற கையின்கண்ணுள்ள வளையினைக்கொண்டு நீங்கின தலைவர் தங்கியிருக்கின்ற ஊரின்கண்ணே நீவிர் விரைவாகச்சென்று (இங்ஙனம் நீவிர் இருத்தல்) பொருந்தாதென்று சொல்லும் நீங்கள் இச்செயலை யறியாதிருத்தல் என் தீவினைப்பயனே யன்றி வேறில்லை யென்றா ளென்க. (வி - ம்.) அன்றில் -அண்மைவிளி. முயங்கல் - புணர்ச்சியிற் பிரிவின்றியிருத்தல். தவிர்தல் - தங்குதல். மெய்ப்பாடு : அச்சம். பயன் : அயர்வுயிர்த்தல். (342) கொலைத் தொழிற்புள்ளிது கூறாதென்றல் அஃதாவது தலைவன் பிரிவால் அன்றிலை நோக்கிக் கையாறெய்திய தலைவி நீர்ச்செறுவையும், தடத்தையும், நீர்நிலையையும், கழியையும் தாங்கள் நிலைபெறுதற்குரிய நிலைக்களமாகக்கொண்டு உயிரையுண்டுண்டு தேக்குங் கொள்கையையுடைய வண்டானமும், குருகும், பெருநாரையும் நம்மை நீங்கினார் வந்து பொருந்த விளம்புமோ யாமறியே மெனக் கூறாநிற்றல். | | வண்டான முங்குரு கும்பெரு நாரையு மற்றுநம்மை | | | விண்டா ரணைய விளம்புங்கொ லோவிரி நீர்ச்செறுவும் | | | தண்டா மரைத்தட முந்தவ ழோடையுந் தண்கழியும் | | | கொண்டா ருயிர்முற்று முண்டுண்டு தேக்குமக் கொள்கையவே. |
(இ - ள்.) பரந்த நீரினையுடைய வயலினையும் குளிர்ந்த தாமரை மலர்களையுடைய தடத்தையும், நீர்நிலையையும், குளிர்ந்த உப்பங்கழியையும் (தாங்கள் தங்குதற்கு நிலைக்களமாகக்) கொண்டு (பெறுதற்கரிய) உயிரினையுண்டுண்டு தெவிட்டுங் கொள்கை (இயல்பாகப் பொருந்தி) யுடையனவாகிய நாரையும், கொக்கும், பெருநாரையும் பிறவுமாகிய புள்ளினங்கள், (நம்மை) நீங்கினார் (மீட்டும்வந்து) கூடும் வண்ணம் பிறவுயிர்க்குத் துன்பஞ்செய்தலைத் தமக்கியல்பாக உடையவைகள் நந்துன்பத்தை அத்தலைவர் மாட்டுக் கூறுமோ கூறாதோவென ஐயமுற்றா ளென்க. (வி - ம்.) ஆருயிர் - மீன் முதலானவை. உயிரையுண்டு தேக்குவனவாகிய நாரை முதலாயின சொல்லுமோவென்க. பிற உயிர்க்குத் துன்பஞ்செய்தலை இயற்கையாக உடையவைகள் நந்துன்பத்தைச் சொல்லுமோ வென்பது குறிப்பெச்சம். கொண்டு - தட முதலியவற்றை |