| இடமாகக்கொண்டு. செறு - வயல். ஓடை - நீர்நிலை. விண்டார் - பிரிந்தார். மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (343) ஆழி யிழைப்பதிற் பீழை படுமென மீதூர் நெஞ்சை மீட்சியிற் படுத்தல் அஃதாவது கொலைத்தொழிற் புட்கள் கூறாதென்ற தலைவி நெஞ்சமே நீங்கிய காதலர் போனவாறிரார். வருவாரென ஆற்றியிருப்பவும் வருவாரோ வராரோவென ஐயுற்று வருந்தவும் மேலாகிய பிரிவென்னும் நோயுள்ளிருத்திய இந்நிலைமையின்றியும் ஆழியிழைப்பதானால் வெருவுற்ற உயிர் பழியுண்டாக நீங்குதலைப் பொருந்தும் எனக் கூறாநிற்றல். | | ஒருவிய காதலர் தாமொழிந் தாங்கொழி யார்வரினும் | | | வருவரென் றாற்றவு மையுற்று நையவும் வான்பிணியுள் | | | இருவிய விந்திலை யின்றியு மாழி யிழைப்பதனால் | | | வெருவிய வாவி பழியெழ நீங்கலு மேவுநெஞ்சே. |
(இ - ள்.) நெஞ்சே! (யான்) கூடற்சுழி இழைத்தலான் நீங்கிய தலைவர் நீங்கியவண்ணம் ஆண்டிரார். (ஒருகால்) வந்தாலும் வருவரென்று ஆற்றிக்கொள்ளவும் வருவரோ வாராரோவென ஐயமுற்று நையும் வண்ணம் (நம்மை) மேலாகிய (பிரிவென்னும்) நோயின்கண்ணே இருத்திய இந்நிலையில்லாமலும் பொருந்தும் (ஆதலால் ஆழியிழைத்தற்கு) அச்சமுற்ற உயிர் பழிச்சொல் (நமக்கு) உளவாக நீங்குதலைப் பொருந்தும் என்றாளென்க. (வி - ம்.) ஆழியிழைப்பதனால் இன்மையும் நீங்கலுமாய இவ்விரண்டு மேவுமென முடிக்க. தலைவர் போனவாறிரார். வந்தாலும் வருவரென்று ஆற்றவும், வருவரோ, வராரோவென ஐயுற்று வருந்தவும் அத்தலைவன் என்னைப் பிணியிலிருத்திய நிலைமை இல்லாமை பொருந்தவும் பொருந்து மென்பாள். "ஆற்றவும் நையவும் வான்பிணியுள் இருவிய விந்நிலை யின்றியுமேவு" மென்றனள். கூடற்சுழி கூடாவிடின் என்னுயிர் நீங்கும் என்பாள். "ஆவிபழியெழ நீங்கலுமேவு" மென்றாள். இதனைப் "பாகவரை வாங்கிப், பழுதாகிற் பழியேற்கு மேகு மாலாவியென" எனவரும் சிந்தாமணி, குணமாலை - 187ஆம் செய்யுளானு மறிக. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (344) இரவி நீங்கப் பருவர லுறுதல் அஃதாவது கூடற்சுழி கூடாவிடிற் பழுதாமென மீதூரார்ந்த நெஞ்சத்தை மீட்டதலைவி வண்டலாட்டின்கட் பொருந்திய தலைவர் அடிச்சுவட்டினையும், குறியிடத்தையும் கண்டு உயிர்தாங்கிய யான் வருந்த வெங்கதிர்க் கடவுள் தேர்நீங்கி நம்மன்பர் தேரினு நமக்குத் துன்பினை விளையா நிற்கின்றதெனக் கூறாநிற்றல். | | வண்டலுற் றாடும் வயின்றொறுஞ் சார்மலர்த் தாட்சுவடும் | | | கொண்டலுற் றேறும் பொழில்வா யளித்த குறியிடமும் |
|