பக்கம் எண் :

1094தணிகைப் புராணம்

 கண்டலுற் றேயுயிர் தாங்கிய யான்கவ லக்கதிர்த்தேர்
 விண்டலுற் றேயன்பர் தேரினுந் தீமை விளைக்கின்றதே.

(இ - ள்.) நெஞ்சே! வண்டலைப் பொருந்தியாடுகின்ற இடங்கள் தோறும் பொருந்துகின்ற மலர்போன்ற (தலைவர்) அடிச்சுவட்டினையும் மேகங்கள் பொருந்தி ஏறுதல்செய்கின்ற பொழிலின்கண் (அத்தலைவர் நமக்கு) அளித்தல்செய்த குறியிடத்தினையும் காணுதலுற்று (அவர் பிரிவான் நம்மிடத்தின்றிச் செல்லும்) உயிரினைத் தாங்கிய யான் கவலும்வண்ணம் கிரணங்களையுடைய வெங்கதிர்க்கடவுள் தேர் நீங்கி (நம் தலைவர்தேர் நீங்கிய காலத்து) அத்தேர் எத்துணைத் துன்பினை விளைக்குமோ அதனினும் மிக்க தீமையை (நமக்கு) விளையாநின்ற
தென்றாளென்க.

(வி - ம்.) சுவடும் குறியிடமும் பகலினல்லது இரவிற்கண்டு ஆற்றலரிதென்பாள். "கண்டலுற்றே யுயிர்தாங்கிய யான்" எனக் கூறினள். காண்டலுற்று : விகாரம். விண்டலுற்று - நீங்கி. வண்டல் - விளையாட்டு. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல்.

(345)

மாலை கண்டவள் சாலவுள் ளழிதல்

அஃதாவது இரவி நீங்கப் பருவரலுற்ற தலைவியானவள் பரந்த கடற்கழிகளின் மீனாகிய விரையை யாராய்ந்துண்ட அன்னங்கள் தத்தமக்குரிய பெட்டைகள் பக்கத்தே பொருந்த மரத்தின்கட் கட்டிய கூடுகளை யாராய்கின்ற அழகிய மாலைக்காலம் நிலையோடுகூடிய அந்தக் கதவினையொத்த தோளுடன்கூடிய மார்பினையுடையார் பொருந்தும் நாட்டின்கண்ணு முளவாய் காட்டின்கட் டோன்றிய அழலினைப்போல (நம்மையேயன்றி) அவர் பக்கலினும் சென்று சுடவல்லதோ எனக் கூறாநிற்றல்.

 அழுவக் கடற்கழி மீனிரை தேரன்னம் பேடைபுடை
 தழுவக் கடிமரச் சேக்கைக ணாடுந்தண் மாலையம்போ
 தெழுவக் கதவுறழ் தோளுரத் தாரெய்து நாட்டுமுண்டாய்ப்
 பழுவக் கனலிற் சுடவல்ல தோவவர் பாலினுமே.

(இ - ள்.) பரந்த கடற்பரப்பின்கண்ணுள்ள உப்பங்கழிகளினுள்ள மீன்களாகிய இரையினை யாராய்கின்ற ஆணன்னங்கள் தத்தமக்குரிய பெட்டையன்னங்கள் பக்கலிற் பொருந்த மரத்தின்கட் தாங்கள் கட்டிய சேக்கைகளை நாடிச் செல்லுதற்கேதுவாகிய அழகிய மாலைக்காலம், நிலையினிடத்துப் பொருந்திய அந்தக் கதவினையொத்த தோள்களுடன் கூடிய மார்பினையுடையார் பொருந்துகின்ற நாட்டின்கண்ணுமுளவாகிக் காட்டின் பரப்பினியல்பா னுளவாகும் அழல்போல (நம்மையேயன்றி) அவர் பக்கலினும் சென்று சுடவல்லதோ, சுடும் வன்மை யுடையதாயின் அவர் அங்ஙனம் நீட்டித்திரார் என்றாளென்க.

(வி - ம்.) மாலையம்போது என்னைச் சுட்டதுபோன்று அவரையும் சுடவல்லதோ வென்க. அங்ஙனஞ் சுட்டதாயின் நீட்டித்திரார் என்பது குறிப்பெச்சம். எழு அக்கதவெனப் பிரிக்க. எழு - ஈண்டு நிலை.