| தோளை நிலையாகவும் உரத்தைக் கதவாகவும் கொள்க. பழுவம் - காடு. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (346) குருகுறு பருவரல் கருணையி னாட்டல் அஃதாவது மாலையம்பொழுது கண்டுள்ளமழிந்த தலைவி ஆண் சக்கரவாகப் பறவைகளோடுகூடிய சக்கரவாகப் பெட்டைகளே, நாவன்மரத்தின் கண்ணுள்ள நிறத்தோடுகூடிய மலர்களையுடைய கிளைகளிற் கட்டிய கூட்டின்கண் நீங்கள் வருந்துவதெல்லாம் காத்தற்றொழிலை மேற்கொண்ட நிறம்பொருந்திய முடியையுடைய தலைவர் நம்மாட்டுள்ள அழகினைக் கவர்ந்து துடைத்தற்கல்லவா, அல்லவாயின் சொல்லுங்களெனக் கூறாநிற்றல். | | சேவற் குருகொடு சக்கர வாகச் செழும்பெடைகாள் | | | நாவற் குருமலர்ச் சாகையஞ் சேக்கையு ணைவதெல்லாம் | | | காவற் குருமணி மோலியர் காரிகை கைக்கவர்ந்து | | | நீவற் குருகியன் றேயல தாயி னிகழ்த்துமினே. |
(இ - ள்.) சேவலாகிய சக்கரவாகங்களோடு கூடிய செழித்த சக்கரவாகப் பெட்டைகளே! நாவன்மரத்தின்கண் நிறத்துடன் கூடிய மலர்களையுடைய கிளைகளின்கண்ணுள்ள அழகிய கூட்டின் (இரவில்) நீங்கள் வருந்துவதெல்லாம் காத்தற்றொழிலை மேற்கொண்ட நிறம் பொருந்திய மணிகள் அழுத்திய முடியினையுடைய தலைவர் நம்மழகைக் கவர்ந்து கெடுத்ததற்கு உருகியல்லவா வருந்துவது அல்லவாயின் சொல்லுங்கள் என்றாளென்க. (வி - ம்.) பெட்டைகாள், நீவிர்நைவது மோலியர்கவர்ந்து நீவற் குருகியல்லவா. அன்றாயின் வேறென்னை நிகழ்த்துமின் என்பாள்" "நைவதெல்லாம் நீவற்குருகியன்றே யலதாயின் நிகழ்த்துமினே" என்றனள். குரு - நிறம். சேக்கை - கூடு. மோலி - முடி. காரிகை -அழகு. நீவல் - துடைத்தல். ஈண்டுக்கெடுத்தல் என்னும் பொருட்டு. பகற்காலத்துச் சூரியகிரணத்தையுண் டின்புறுஞ் சக்கரவாகங்கள் இரவில் அதனை யுண்ணாமல் வருந்துவது இயல்பாகலின் அதனைத் தன்றுன்பங்கருதி நைவதாகக் குறித்தலான் தற்குறிப்பேற்றம். மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (347) சுவாகதம் நோக்கித் தூதுசெல் கென்றல் அஃதாவது குருகுறு பருவரல் கண்டுவருந்திய தலைவி கிளியே! நீ ஒரு பெண்ணினுக்குத் தூதாக வந்தேனென்று கைகுவித்து வணங்கி அஞ்ஞான்றுள்ள விருப்பினையறிந்து தலைவி உன் நிமித்தம் நெஞ்சம் உலையின்கட் பட்ட மெழுகாயினளென்று கூறிவருவாய். அங்ஙனம் வருவாயாயின் சட்டியில் அன்னையால் கொடுக்கப்படும் சோறு உன்வயமே யாமெனக் கூறாநிற்றல். | | பெண்டூது வந்தன னென்றுகை கூப்பிப் பெருநயப்புக் | | | கண்டூது வண்டுளர் தார்வரை மார்பர்க்குக் காதனெஞ்சம் |
|