| கண்படை பெறாது கங்கு னோதல் அஃதாவது நினக்குக் கண்ணோட்டமில்லையெனச் சுனையினுக் குரைத்த தலைவி பகைவர்புரத்தினுக் கிளஞ்சிரிப்பைக் காட்டினவனாகிய இறைவன்றன் றிருக்கண்களை விளையாட்டான் அம்மையார் புதைத்த காலத்துண்டாகு மிருளைக்காட்டிலும் இக்கங்குலானது நீடலானுள வாகுங் காமநோயினுக்கு என் உயிர் நடனசாலையையுடைய நகரமாக முழவினைப்போலக் குயிலிரங்க, அவரைக் காணலுற்று என் கண்படாதெனக் கூறாநிற்றல். | | புரங்கட் கிளநகை காட்டிதன் கண்பொதி ஞான்றினுமேழ் | | | துரங்கக் கடவுளில் லாக்கங்கு னீடத் துளங்கும்வெந்நோய்க் | | | கரங்கக் கடிநக ராருயி ராக வதிர்முழவின் | | | இரங்கக் கருங்குயி லென்கண் படாதவர்க் காணலுற்றே. |
(இ - ள்.) பகைவர் புரங்களெரியும்வண்ணம் புன்சிரிப்பைச் செய்தவனாகிய இறைவன் றிருக்கண்களை அம்மையார் புதைத்த காலத்தைக் காட்டினும் ஏழ்குதிரையினைப் பூட்டிய தேரினையுடைய வெங்கதிர்க்கடவுளின் மையோடுகூடிய இருளானது அதிகரித்தலான் வருந்துகின்ற வெவ்விய காமநோயினுக்கு எனதரியவுயிர் காவலோடுகூடிய நடனசாலையினை உடைத்தாகிய நகரமாக அதிர்கின்ற மத்தளவொலியினைப்போன்று குயிலான தொலிக்க அத்தலைவரை என் கண்பார்த்துக் கண்படா தென்றாளென்க. (வி - ம்.) காட்டி : வினையாலணையும் பெயர். படாது - நித்திரை செய்யாது. உற்று - விரும்பி. அரங்கம்- நடனசாலை. சிவபெருமானுடைய கண்களை மூடியகாலத்துண்டாகும் இருளினைக் காட்டிலும் இக்கங்குலானது நீடலால் உண்டாகும் காமநோயென்க. நகர் எனதுயிராகவென்க. அவரைக் காணலை விரும்பிக் கண்படாதென்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (355) அனமொத் தியலுநள் கனவிற் றளர்தல் அஃதாவது கண்படைபெறாது கங்குனொந்த தலைவி பாவியாகிய யான் நீ யென்னிடத்தில் அடுத்த தன்மைக்கு எதிர்ந்த கண்களை மீட்டுக் கொண்டும் பொருந்தாத தன்மையை ஏற்றுக்கொண்டாய்க்கு எதிர்ந்த கண்களை மீளச்செய்தும் பகைவரென்று சொல்லும்வண்ணம் விடுத்த தன்மைக்குக் காரணத்தைச் சொல்லென்று தலைவனை மெலிவின்கண்ணே பொருத்தியதற்குப் பயனின்றாக விழித்துக்கொண்டேன் கொடும்பாவியாகிய யான் எனக் கூறாநிற்றல். | | அடுத்தமைக் கேயெதிர் நெஞ்சினை மீட்டு மடாத்தொழின்மை | | | தொடுத்தமைக் கேயெதிர் கண்களை மீட்டுந்துன் னாரெனநீ | | | விடுத்தமைக் கேது விளம்பென வேந்தன் றனைமெலிவில் | | | படுத்தமைக் கேதுமின் றாவிழித் தேன்கொடும் பாவியனே. |
(இ - ள்.) கொடும்பாவியாகிய யான் தலைவர் என்னை வந்தடுத்தமையான் (அவரோடு முன்னர்க்கூடிய) நெஞ்சினை மீளச்செய்தும் |