| பூக்கள் விரியப்பெற்றுச் சிலம்பெதிர்கூய்ச் சுனையாடிப் பொழிலின்கண் ஊசலினை நடாத்தி விளையாடிக் கிளைகளில் மலர்கொய்யாநிற்கும் வாழ்வினையெல்லாங் கெடுப்பா னின்றதெனக் கூறாநிற்றல். | | சிலம்பெதிர் கூய்த்தெளி நீர்ச்சுனை யாடித்தண் டேம்பொழில்வாய் | | | நலம்பெறு மூச னடாய்வண்ட லாடி நறுஞ்சினையிற் | | | குலம்பெறு பூக்கொய்யும் வாழ்க்கையெல் லாங்குலைப் பானின்றதால் | | | சலம்பெறு வேங்கை யிணர்த்துமென் றேற றளித்தலர்ந்தே. |
(இ - ள்.) நம்மீது சீற்றங்கொண்ட வேங்கையார் தளிர்த்தல் செய்து மெல்லிய தேன்றுளியினைத் துளித்தல்செய்து (மலர்)விரியப் பெற்று (நாம்) சிலம்பினுக் கெதிராகக்கூவித் தெளிந்த நீரினையுடைய சுனையின்கண்ணே நீராடிக் குளிர்ந்த தேனோடுகூடிய பொழிற்கண்ணே இன்பினைப் பெறுதற்குரிய ஊசலினைச் செலுத்தி வண்டல் விளையாட்டுச்செய்து நல்லகிளைகளின்கண்ணே மேன்மைபொருந்திய மலர்களைப் பறிக்கும் வாழ்வினையெல்லாம் கெடுக்கும்பொருட்டு நின்றார். ஆதலால் நாளை நம்மை இற்செறிப்பராதலின் பகற்குறியடா தெனக் கூறினாளென்க. (வி - ம்.) ஊசல் நடாய் - ஊசலினை நடாத்தி. குலம் - மேன்மை. சலம் - சீற்றம். இணர்த்து - தளிர்த்து. தளித்தல் - துளித்தல். அலர்தல் - விரிதல். வேங்கை யிணர்த்து தளித்து அலர்ந்து குலைப்பானின்றதென்க. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : இரவுக்குறி யுணர்த்தல். (364) விளைதினை காட்டி வேட்டை மேலிட்டுத் தளையவிழ் பொழிலிற் சாரலை யென்றல் அஃதாவது பகற்குறி விலக்கி இரவுக்குறிதேர் பாங்கி வெற்பனே! தினைவிளைந்ததனைக் காண்பாய். புனத்தின் பக்கலில் விலங்கினங்கள் சூழ்ந்தனவென்று வேட்டஞ்செய்யுந் தொழிலினையுடையையாய் இனி புனத்தின்கண் வாராதேகொள். (தினைக்கதிரைக் கொய்தலான் உணவின்றி)த் தாழ்ந்த (தினைக்) கதிரை யுண்கின்ற பறவையினங்கள் தினைக் காவலின்றி இற்செறிப்புக்கு வருந்தும் எம்முள்ளத்தினோடு வருந்தின. என்னையன்மாரோடு வருத்துதல் கருதிய கணி மகிழ்ச்சியின் மூழ்கின வெனக் கூறாநிற்றல். | | விளைந்தன வாற்றினை காண்டிவெற் பாமென் புனத்தயன்மா | | | வளைந்தன வாலென வேட்டையை மற்றினி வாரலையோ | | | உளைந்தன வாலெம் முளத்தொடு தாழ்குர லுண்குருகு | | | துளைந்தன வான்மகிழ் வென்னைய ரோடடல் சூழ்கணியே. |
(இ - ள்.) வெற்பனே! தினைவிளைவுற்றன காண்பாய். மெல்லிய புனத்தின்பக்கலில் விலங்கினங்கள் சுற்றித்திரிகின்றன வென்று வேட்டஞ்செய்யும் தொழிலினையுடையையாய் இனிப் (புனத்தின்கண்) ஐயனே வாராதே கொள்வாயாக. (தினைக்கதிரைக் கொய்தலான்) தாழ்ந்ததினைக்கதிரை உண்கின்ற பறவையினங்கள் (தினைக்காவலின்றி) |