பக்கம் எண் :

களவுப் படலம்1107

இற்செறிப்பினுக்கு வருந்தும் எம்முள்ளத்தோடு வருந்தின. தினை விளைந்தமை கருதி மகிழ்வுறுகின்ற என்னையன்மாரோடு வலிமை பொருந்திய வேங்கைமரங்கள் மகிழ்ச்சியின் மூழ்கினவென்க.

(வி - ம்.) வெற்பா தினைவிளைந்தன புனத்தயன்மா வளைந்ததென வேட்டையுடையையாய் இனி வாரற்க வென்க. என்னையரோடு கணி மகிழ்ந்து துனைந்தனவென்க தினைவிளைந்தமையானுளவாகிய மகிழ்ச்சிய ரென்பாள் "என்னையரோடு" என்றாள். கணியானது தான் கெடுதற்குக் காரணமாக வுளவாகிய தினைக்குக் (கொய்தலாகிய) கேடுண்டாமாற்றை யறிந்து மகிழ்ச்சி கொண்ட தென்பாள். துளைந்தனவான்மகிழ்..... அடல்சூழ் கணியே" என்றார். மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல்.

(365)

தெய்வக் கணியொடு நைவுற் றுரைப்பக்
கறைப்பொலி வேலற்குச் சிறைப்புறக் கிளவி

அஃதாவது விளைதினை காட்டி வேட்டைமேலிட்டுப் புனத்திற் சாரலையென்ற தோழி தெய்வத்தன்மை பொருந்திய அழகிய கணியே தினைகொய்யத் தக்கதென்று அலரைத் தூற்றுதல்செய்து எங்களை வருந்தச் செய்வதல்லவா நின்குலக்கணி இம்மலையின்கண் பிழைப்பதாக எங்களைப் பொருந்திநின்ற உன்னை நீங்கி இனி உளதாவது மிகவும் வருந்துவதே யாமெனக் கூறாநிற்றல்.

 கொய்வதன் றேதினை யென்றலர் தூற்றிக் குழையவெம்மைச்
 செய்வதன் றேநின் குலக்கணி தெய்வத் திருக்கணியே
 உய்வதன் றேயெமக் குற்றுநின் றாயை யொழிந்துநனி
 நைவதன் றேயினி் யுள்ளது போலுமிந் நாகத்திலே.

(இ - ள்.) தெய்வத்தன்மை பொருந்திய அழகிய வேங்கைமரமே. (தங்களுக் கத்தினை முன்னர்ச் செய்த தீங்கினையுன்னி) தினைக்கதிர்கள் கொய்தக்கனவல்லவா வென்று பலருமறிய (பழிச்சொல்லினைப் பரப்பி) மலர்களைத் தூவி நின்குலத்துட்டோன்றிய வேங்கைகள் எங்களை வருந்தச்செய்தன வல்லவா எங்களுக்கு (இப்புனத்தின்கண்) துணையாகப் பொருந்திநின்ற உன்னைப் பிரிந்து இம்மலையின்கண்ணே இனியெங்களுக்குளதாவது மிகவும் வருந்துவதேபோலு மென்றனள் என்க.

(வி - ம்.) தெய்வத் திருக்கணி - முருகனாகிய வேங்கை. தெய்வக் கணியே நின்குலக்கணி அலர்தூற்றி எம்மைக் குழையச் செய்கின்ற தல்லவா உய்வதாகத் துணையாக வுற்றுநின்ற உன்னைப் பிரிந்து இனி நைவது இம்மலையின்கண்ணுள்ளது போலுமென்க. அலர் - பழிச்சொல், மலர். தினையறுக்குங் காலத்தைக் கணிமலர்ந்து தெரிக்குமென்பதனை "அங்கணெஞ்சிய வேங்கைகள்போது செய்தலரும்" என்பதனானுணர்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல்.

(366)

சிறைப்புறத் தலைவற்குக் குறிப்புரை கிளத்தல்

அஃதாவது தெய்வக்கணியொடு நைவுற்று வேலற்குச் சிறைப்புறக் கிளவிகூறிய தோழி பூக்களையுடைய கணியே தம்மை விரும்பினவரை