| யொற்றுகின்ற தானையும் வெய்யவர் சேர்ந்த இல்லையும் தோன்றுகின்ற நிறையினிடத்துத் தங்குகின்ற காவலையும் காட்டியதெனக் கூறாநிற்றல். | | வளைவாய்ச் சிறுகிளி யோப்புங் கருவியும் வாரிதணும் | | | விளைவார் தினைப்புன மேல்வைத்த காவலு மீட்டுவிழித் | | | திளைவார் புனலொற்றுந் தானையும் வெய்யவர் சேர்ந்தவில்லு | | | முளைவா னிறைவைகுங் காவலுங் காட்டிற்று மொய்யருளே. |
(இ - ள்.) (இறைவனே) செறிந்த நின்னருள் வளைந்த வாயினையுடைய சிறிய கிள்ளைகளை யோட்டும் தட்டையென்னும் கருவியும், நீண்ட பரணினையும், விளைத்தல் பொருந்திய தினைப்புனத்திடத்து வைத்த காவலையும் நீக்கி அவைகளுக்கெதிராக விழியினிடத்து நிறைந்து ஒழுகுகின்ற புனலைத் துடைக்கும் அறுவையையும், கொடியவர் சேர்ந்த இல்லினையும் தோன்றுகின்ற கற்பினிடத்து வைகுகின்ற காவலாகிய மூன்றினையும் காட்டியது, ஆதலால் இற்செறியாநிற்பர். இல்லில் யாங்கள் வருந்தாவண்ணம் வரைந்து கொள்வாயாக வென்றன ளென்க. (வி - ம்.) தலைவனே யுன்னருள் கருவியும், இதணும் காவலுமாகிய மூன்றையும் நீக்கிப் புனலொற்றுந் தானையையும் வெய்யவர் சேர்ந்த இல்லினையும் நிறையாற் காக்குங் காவலையும் காட்டியதென்க. இதனால் தாய் முதலியவர்கள் இற்செறிப்பார்கள் யாங்கள் இல்லிலிருந்து வருந்தாவண்ணம் விரைவில் வந்து வரைந்து கொள்ளென்பது சொல்லெச்சம். வளைவாய் - வளைந்தவாய். ஓப்பும் - ஓட்டும். இதண் - பரண். முளைவானிறைவைகுங் காவலுங் காட்டிற்று - தோன்றுகின்ற மேலாகிய கற்பின்கட்டங்கும் காவலையும் காட்டியது. இனி, உளை வானிறைவைகுங் காவலும் காட்டியது - யாங்கள் வருந்தும்பொருட்டு நிறையின்கட்டங்கும் காவலுமெனப் பொருள்கொள்ளினுமமையும். தலைவன் அருள் கருவி முதலியவனைத்தையும் காட்டியதெனவே தலைவன் மேற்கூறிய நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கு நிலைக்களமாக நிற்றலேயல்லாமல் வரைந்து கொள்ள நினைந்திலன் என்பாள். "காட்டிற்று மொய் யருளே" என்றனள். தலைவி தினைப்புனங்காவலொழிந்து இருத்தற்கு வீடு இடமாதலால் "வெய்யவர் சேர்ந்தவில்லும்" என்றனள். அருள் கற்புக்காவலைக் காட்டலாவது தலைவன் தலைவியினுள்ளம் வேறொரு தலைவனை விரும்பாவண்ணம் தம் வயமாக்கி நிற்றல். நிறைவைகுங் காவல் - ஈன்றோர் கற்பின் வழுவாவண்ணம் இற்செறிக்குங் காவல். பாணித்த - நீட்டித்த. பருவரல் - துன்பம். மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவுகடாவல். (370) குறிப்பு வேறுபடல் குறிப்பொடு கிளத்தல் அஃதாவது வரைவு நீட்டித்தலானுளவாகிய துன்பினைக் கிளந்த தலைவி தினைப்புனத்தின் களவுப் புணர்ச்சியான் இன்பந் துய்த்தலினிருந்ததன் கருத்து, இப்பொழுது வரைவின் மேற்சென்று வேறுபட்டிருக்குங் குறிப்பைச் சிறைப்புறத் தலைவற்குச் சாரலின்கண்ணே வருந்துகின்ற சிறுகிளிகளே நீங்களுண்ணத் தினைக்கதிர்க ளகப்படு மாயினும் யாங்கள் துன்பினுக்கஞ்சி (தினைப்புனத்தின்கண் வருகின்ற நுங்கள் வரவைத் தடுக்கின்ற) தடை நீங்கிய ஏதுவினாலோ அக்கதிர் |