| முழுவதும் நீங்கிய இருவியின்கண் மகிழ்ச்சிமிகப் பொருந்தக் கருதுகின்றீர். ஆதலால் எம்போல் நுமக்கினித் துன்பமின்றெனக் கூறாநிற்றல். | | ஆரக் குரல்க ளகப்படு மேனுமெம் மல்லற்கஞ்சிச் | | | சாரக் கவலுஞ் சிறுகிளி காடகை தீர்ந்ததென்றோ | | | வாரக் கதிர்முற்று மாற்றிய தாளின் மகிழ்சிறப்பச் | | | சேரக் கருதுகின் றீரெம்மைப் போலினிச் செல்லலின்றே. |
(இ - ள்.) (நுமக்கு) உண்ணத் தினைக்கதிர்கள் இலகுவாக அகப் படுமாயினும் யாம் ஒப்பும்பொருட்டு எறிகின்ற கல்லாற்றீங்கு புரிதலுக்கஞ்சி மீட்டும் தினைப்புனமடைய வருத்தம்பெறும் சிறிய கிளிகளே! நுங்களைத் தடுக்குந்தொழில் நீங்கிய காரணத்தானே (கதிர்கள் கொய்யப்பெற்ற) இருவியின்கண்ணே மகிழ்ச்சி மிகப் பொருந்துதற்குக் கருதுகின்றீர். (இனித் தமர் இற்செறிப்பார்) யாங்களடையும் (துன்பினையொத்த) துன்பம் இன்றென்க. (வி - ம்.) குறிப்பு வேறுபடல் : இற்றைவரை புனத்தின்கண் களவின் இன்பந்துய்த்த தலைமகள் உள்ளக் குறிப்பு வெளிப்படின் அலராமெனக் கருதி வரைவின் மேற்சென்று வேறுபட்டிருக்குந்தன்மை. குறிப்பொடு கிளத்தல் தம்முள்ளக் கருத்தைச் சிறைப்புறத் தலைவனுக்குக் கிளிகளை நோக்கிக் குறிப்பாகக் கூறாநிற்றல். "ஆரக் குரல் களகப் படுமேனு மல்லற்கஞ்சிச் சாரக்கவலுஞ் சிறுகிளிகாள்" என்றதனால் தலைவனே நீ களவின்கண் இன்பந்துய்க்கக் கருதின் என்னால் அவ்வின்பந் தடையின்றிக் கிடைக்குமாயினும் இதனையறிந்த எம்மவர் என்னை இற்செறிப்பின் அதனை யுணர்ந்து நீ வருந்தப்பெறுவாய் என்னும் பொருள் குறிப்பாகப் போந்த குறிப்புப் பொருளானும், "தகை தீர்ந்த தென்றோ, வாரக் கதிர்முற்றும் மாற்றிய தாளில் மகிழ்சிறப்பச், சேரக் கருதுகின்றீர் எம்மைப்போலினிச் செல்லலின்றே" எனக் கூறியதனால் முன்போந்த குறிப்புப் பொருளானும், பின்னர்க்கூறும் குறிப்புப் பொருளானும் போந்த முக்கியப் பொருள்வருமாறு : தலைவனே! நீ என்னை அந்தணர் சான்றோர் அருந்தவரை முன்னிட்டு வரைந்து கொள்ளின் இங்ஙனமாய வருத்தமின்றெனத் தன் கருத்து வரைவின் மேற் சென்ற குறிப்பிலிருந்து வேறோர் குறிப்புத் தோன்றியவாறு காண்க. "எம்மைப்போலினிச் செல்லலின்றே" எங்களைப்போன்று கிளிகாள் நுமக்குக் கவணெறி கல்லாற்றுன்பமில்லை யெனவே, தலைவனே என்னை எம்மவர் இல்லில் வைத்துவிட்டால் யான் புணர்ச்சியின்பம் பெறுதற் கருமையாகித் துன்பமடைய நேருமென்றும், என்னோடனுபவிக்கும் புணர்ச்சி இன்பத்தை நீ என்னையொழித்து வேறொரு தலைமகளை மணந்து இன்புற்றுத் துன்பமொழிதல் உனக்குத் தகும். அது ஆண்மகனுக் கிகழ்ச்சியாகாது. ஆகையால் உனக்குத் துன்பில்லையென்றும் உணர்வாய் எனச் சிறைப்புறத் தலைவற்குத் தலைவி குறிப்பாக உணர்த்திய குறிப்புப்பொருள் போந்தவாறு காண்க. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (371) பரிவுறு வருத்தம் தெரிவுறக் கிளத்தல் அஃதாவது குறிப்பு வேறுபடல் குறிப்பொடுகிளந்த தலைவியானவள் எம்மைக்கூடிய தலைவரை இத்தலைவி வாடநோக்கிய காரணமென்னையென |