| நாடவுரைக்கும் நன்றியுளவாமாயின் ஆடிடத்தினையும் சுனையினையும், கூடிடத்தையும் புனத்தினையும் நோக்கிக் குழைத னன்றாமெனக் கூறாநிற்றல். | | ஆடிட நோக்கி யலர்சுனை நோக்கியன் பூடுருகக் | | | கூடிட நோக்கிக்கொய் பூம்புன நோக்கிக் குழைதனன்றே | | | வாடிட நோக்கிய தென்னையென் றெம்மை மரீஇயினர்க்கு | | | நாடிட நோக்கி யுரைத்திடு நன்றி யிருந்திடினே. |
(இ - ள்.) எங்களை மருவினராகிய தலைவரை (இத்தலைவி) வாடும் வண்ணம் நீவிர் கருதியதென்னை காரணமென்று நாடும்வண்ணம் கருதச் சொல்லும்படியான நன்மையிருப்பின் (யாங்கள்) விளையாடல் செய்கின்ற விடமும், மலர் மலர்கின்ற சுனையும். அன்பினோடுள்ளமுருகக் கூடுகின்ற இடமும் மலர்கொய்தற் கேதுவாகிய சுனையுமாகிய இவற்றினை நோக்கி வருந்தல் நன்றாகும். இவைகள் அங்ஙனஞ் செய்யாமையின் ஆகாவென்றா ளென்க. (வி - ம்.) எம்மை மருவினராகிய தலைவரை ஆடிட முதலியவைகள் நீவிர் தலைவியை வாடநோக்கிய தென்னையென்று எங்களைத் தலைவர் நாடவுரைக்குமாயின் அவைகளை நோக்கிக் குழைதல் நன்றாகு மென்பார் "நோக்கிக் குழைதனன்றே" யென்றார். அவைகள் இங்ஙனஞ் செய்யாமையின் குழைதல் நன்றன்றென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்கல். (372) நெடுந்துய ரலைப்ப நீங்கத் துணிதல் அஃதாவது பரிவுறுவருத்தம் தெரிவுறக் கிளந்த தலைவி வரையாடே துன்பஞ் செய்தார்க்கு உதவிசெய்பவர் இவ்வுலகிலே எவருமிலர். ஆதலான் நோக்கினாலும், மொழியினாலும், சாயலினாலும் மாறுபாடு கொண்ட மாவுங்கிளியும் மயிலுமாகிய இவைகள் தலைவியின் பிரிவைக் கிளவா ஆடேகரியை யடர்த்தவராகிய தலைவர்க்கு நாங்களில்லிற்குச் செல்லும் பிரிவைப் புகல்வாயாகவெனக் கூறாநிற்றல். | | பீழைசெய் தார்கட் குதவிசெய் வாரெவ ரேபிரிவு | | | மாழைசெய் நோக்கின் மொழியின் மென்சாயலின் மாறுகொண்ட | | | ஏழைசெய் மாவுங் கிளியு மயிலு மிவைகிளவா | | | பூழைசெய் வார்கைக் கரியடர்த் தார்க்குப் புகன்மறியே. |
(இ - ள்.) (தலைவியின் உறுப்பினு ளொன்றனுக்கேனும் உவமை யாகாத வரையின்கண் இயங்கும்) ஆடே (தனக்குத்) துன்பினைச் செய்தார்க்கு உதவி செய்பவர் (உலகினுள்) எவருமிலர். ஆகலான் மாவடுவின்றன்மையைச் செய்கின்ற கண்ணினாலும், இனிய சொற்களாலும் மெல்லிய தன்மையானும் தலைவியின் உறுப்புக்களினோடு மாறுபாடுகொண்ட அறியாமையோடு கூடிய வண்டும் கிளியும் மயிலுமாகிய இவைகள் (தலைவியின்) பிரிவினைத் (தலைவற்குச்) சொல்லா. துவாரம் பொருந்திய நீண்ட கையினையுடைய யானை (நம்மீது செல்லாது) வருத்திய தலைவருக்கு நீ புகல்வாயாக வென்றாளென்க. |