பக்கம் எண் :

களவுப் படலம்1113

(வி - ம்.) பிரிவைக் கிளவா என இயைக்க. மாழை - மாவடு. தலைவியின் அவயவங்களோடு உவமையாகாமன் மாறுபாடுகொண்டதனான் மாவும் மயிலும் கிளியுமாகிய இவைகள் கிளவாவாகலான் "பீழைசெய்வார்கட் குதவிசெய்வாரெவரே" என்றனள். ஏழை - அறியாமை. மறி - வரையாடு. வரையாடு தலைவியின் அங்கங்களுக்கு மாறுபாடு கொண்டிலதாகலான் "புகன்மறியே" என்றனள். துறை தலைவி புனத்தின்கண்ணின்றும் நீங்கத் துணிதல். இவை மூன்றும் தலைவி இல்லிற்குச் சென்றாளெனக் கிளவாவென்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : இற்செறிவுறுத்தி வரைவுகடாதல்.

(373)

வழியியக் குற்றவள் கழுமலுற் றுரைத்தல்

அஃதாவது நெடுந்துயரலைப்ப நீங்கத் துணிந்த தலைவி மயிலும் கிளியும் தலைவியின் நடையினொடு மென்மையும் அழகினொடு சொன்னயமு மழிந்திழிந்தது காணென்று இறுமாந்து புனத்தின்கட்டங்கி மொழியுமாயினும் அம்மொழிகள் நம்முயிரைப் போகாது காக்குமொழியாகும். அவை மொழியாது கழியுமாயினும் தெய்வத வேங்கை நம்மைக் காப்பதாகுமெனக் கூறாநிற்றல்.

 அழிந்தது சாய னடையொடு மாமையொ டஞ்சொனலன்
 இழிந்தது காணென் றிறுமாப் பொடுமெழிற் றோகைகிள்ளை
 மொழிந்தன வாயினு நம்முயிர் காக்கு மொழியதுவே
 கழிந்தன வாயினுந் தெய்வத வேங்கைநக் காப்பதுவே.

(இ - ள்.) (புனத்தின்கட் டங்கிய) அழகினையுடைய மயிலும் கிளியும் தலைவியின் நடையினோடு மென்மைத்தன்மையும் அழிந்தது. அழகோடு சொன்னயமும் இழிந்ததென செம்மாந்து மொழியுமாயினும் அம்மொழிகள் நம்முயிர் போகாது காப்பனவாகும். அவைகள் அங்ஙனம் மொழியாது வாளாவிருப்பினும் தெய்வத்தன்மை பொருந்திய வேங்கை நம்மைக் காப்பதாகு மென்றாளென்க.

(வி - ம்.) மயிலுங் கிளியும் இறுமாப்பினோடு கூறினும் அம்மொழியை ஏதுவாகக்கொண்டு தலைவர் நம்மூர்வயின் வருவரென்பாள். "உயிர்காக்கு மொழியதுவே" யென்றாள். கழுமல் - துன்பம். மெய்ப்பாடு : அழுகை. பயன் :
ஆற்றாமைநீங்கல்.

(374)

வறும்புனம் நோக்கி மன்னவன் மறுகல்

அஃதாவது தோழி இங்ஙனமுரையாநிற்க மேகங்கள் தவழும் சாரலின்கண் அருவிநீரால் வளர்ந்த தினைப்புனமானது நென்னல் கதிர்களோடும் தலைவி முதலிய ஆயத்தாரோடும் பொலிவுற்றது. இன்று அக்கதிர்களுங் கொய்யப்பெற்றுத் தலைவியும் ஆயத்தார்களும் இன்றி இருவிப்புனமானது, ஆகூழிற்பொலிவு பெறுதலையும் போகூழிற் பொலிவிழத்தலையும் காட்டாநின்றது. அஃதன்றிக் கூடிப்பிரிந்தவர் கேட்டிற்குஞ் சான்று வழங்கி நின்றதெனத் தலைமகன் கூறாநிற்றல்.

 கருவிப் புயறவ ழுந்தடஞ் சாரற் கனைமணிவெள்
 ளருவிப் புனலின் வளர்தினைப் பூம்புன மைதெழிறீர்ந்