| | திருவிப் புனமென நீன்றூ ழெறுழ்த்திறங் காட்டிற்றந்தோ | | | மருவிப் பிரிநர்தங் கேட்டுக்குஞ் சான்று வழங்குவதே. |
(இ - ள்.) மின்முதலிய தொகுதிகளையுடைய மேகந்தவழ்கின்ற பெரிய மலையின்பக்கத்தின்கண்ணுள்ள செறிந்த வொளியையுடைய முத்துக்களை யுடைய வெள்ளிய அருவிநீரான் வளர்ச்சியுற்ற தினையினையுடைய பொலிவு பெற்ற புனமானது விரைய அழகுகெட்டுக் கதிர் கொய்த தாளினோடுகூடிய புனமென்று (கண்டார்) சொல்லும்வண்ணம் நிலைபெற்று ஆகூழ் போகூழின்றிறத்தைக் காட்டாநின்றது. அஃதன்றியும் (முன்னர்க் கூட்டமுற்றுப்பின்) பிரிந்தவருடைய கேட்டினுக்குஞ் சான்று வழங்குவதா யிருந்ததென்றா னென்க. (வி - ம்.) கருவி - மின்முதலிய தொகுதி. மணி - முத்து. ஐ - விரைவு. இருவி - கதிர்கொய்த தினைத்தட்டை. ஊழ் - ஈண்டு ஆகூழ் போகூழ் இரண்டின் தன்மையை யுணர்த்திநின்றன. ஆகூழாற் புனங்கதிர்களோடு தலைவியாலும், ஆயக்கூட்டத்தாலும் பொலிவுபெற்றது. போகூழாற் கதிர்கொய்த தட்டைகளோடு தலைவியும் ஆயமும் நீங்கப் பொலிவிழந்தது. சான்று - கரி. மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்கல். (375) கருத்துவேறுபட வருத்தமிக் குரைத்தல் அஃதாவது வறும்புன நோக்கி மறுகிய மன்னவன் ஐந்தவத்தையினை நீங்கிச் சிவத்தினோடு கூடுமக்கலப்பினை யெனக்குச் செவியறிவுறுத்து அடிமைகொண்ட வீராட்டகாசப் பெருமானது தாளையொழிய முதன்மைபெற விளங்கும் உலோக பதவிகளும் துன்பம் விளைப்பனவாம். ஆதலால் தலைவியுள்ள காலத்து யான் வர ஓகையுளவாக்கும் இச்சாரலும் இன்று தலைவியின்மையால் வருத்துகின்றது இச்சாரலும் இப்புவனங்களினோரிடம் போலுமெனக் கூறாநிற்றல். | | ஐந்தென வோது மவத்தையு நீங்கி யவக்கலப்புத் | | | தந்தெனை யாண்டருள் வீராட்ட காசத்தின் றாளொழிய | | | முந்தென வோங்கும் புவனமுந் துன்ப முகிழ்க்குங்கொலாம் | | | வந்தென வோகை செறிக்குமிச் சாரல் வருத்துவதே. |
(இ - ள்.) தலைவியுள்ள காலத்து யான்வர உவப்பினைத் தருகின்ற இம்மலைச்சாரலும் என்னை வருத்தாநிற்கும். ஆதலால் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதமெனச் சொல்கின்ற ஐந்து நிலையினையும் (அதற்கப்பாற்பட்ட பொருளினோடு) கலக்கின்ற அக்கலப்பினை (எளியேனுக்) களித்து அடிமைகொண்ட வீராட்டகாசப் பெருமானது (இன்பவடிவமாகிய) திருவடிகளைத் தவிர முற்படத்தோன்றும் புவனங்கள் யாவும் துன்பினைத் தோற்றுவிப்பனவே யாகுமென்க. (வி - ம்.) வீராட்டகாசன்றா ளொழியப் புவனங்கள் யாவும் துன்பினை யுளவாக்குமாகலின் இச்சாரலு மவற்றுளொன் றென்பார். "உவகை செறிக்குமிச்சாரல் வருத்துவதே" என்றார். முந்து - முதன்மை. கலப்பு - அத்துவிதம். வீட்டினைத் தாளென உபசரித்தனர். வந்தென - வர, மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமைநீக்கல். (376) |