| தளர்வறத் தோழி தழீஇக் கூறல் அஃதாவது பின்னிலை முனிந்து பெருந்தகை கவறலைக் கண்டு தோழி வாவற் பறவையானது கனியை யாராய்ந்துண்டு நீங்குகின்ற சிலம்பின் கண்ணுள்ள வேலை வலப்பக்கத்துடையவனே! பாவைபோல்வாள் தலைவர் வந்து அருள் செய்யுமென்று நெஞ்சிற்றங்கியவைகளை வெளியிடுவதற்கு முன்னாகக் கண்ணீர் நிறைத்தாளெனக் கூறாநிற்றல். | | அஞ்சிறை வாவ னறுங்கனி தேர்ந்துண் டகல்சிலம்பின் | | | நஞ்சிறை வேல்வலத் தாயன்பர் வந்தரு ணல்குமென்றேன் | | | நெஞ்சிறை கொண்ட துமிழுமுன் கண்ணீர் நிறைக்குமன்னோ | | | பஞ்சிறை கொண்ட பரிபுரச் சீறடிப் பைந்தொடியே. |
(இ - ள்.) அழகிய சிறையினையுடைத்தாகிய வாவற் பறவையானது நல்ல கனிகளை யாராய்ந்து உண்டு நீங்குகின்ற மலையின்கண் நஞ்சுதங்கிய வேற்படையையுடைய தலைவனே, தலைவர்வந்து அருளினைப் பண்ணுவார் என்று சொன்னேன். யான் சொன்ன மாத்திரத்தில் தன் மனத்திற்றங்கிய கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னரே செம்பஞ்சுக் குழம்பு தங்கிய சிலம்பினையணிந்த சீறடியினையுடைய பசிய வளையலினை யணிந்த தலைவியானவள் கண்ணினின்று நீரை நிரைத்தழுதா ளென்க. (வி - ம்.) வாவலானது நறுங்கனியை யுண்டகல்வதற் கேதுவாகிய மலையெனவே தலைவனே! நீயும் இவண்வந் தின்பந்துய்த்து எங்கள் மாதரை வரைந்துகொள்ளாமற் பிரிந்து செல்கின்றாயென்னு முள்ளுறை தோன்றுதல் காண்க. இறைகொளல் - தங்கல். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (382) கடனறி தோழி யுடன்பட் டுரைத்தல் அஃதாவது தலைவன் தளர்வு நீங்கத் தழீஇக்கூறிய தோழியானவள் அண்ணலாகிய நீயும் தணியாத உள்ளத்தை யுடையாய் ; சூரியனும் மறைந்தனன். மேகந் துளியைச் சொரிந்தன. இயமனைப்போல விலகிச்செல்லும் விலங்கினையுடைய வழிகளுடன்கூடிய குறிச்சியிற்புக்கு வல்லிக்கொடி போல்வாள் விழிப்புனல் கொள்ளாவகை வைகுதியெனக் கூறாநிற்றல். | | ஆற்றா வுளத்தினை யண்ணலு மாதவ னீடொளித்தேர் | | | தோற்றா தொழிந்தன னுண்டுளி மேகஞ் சுரந்தனவால் | | | கூற்றா மெனவிலங் கும்விலங் காற்றிற் குறிச்சிபுக்கு | | | மாற்றா விழிப்புனல் வல்லிகொள் ளாவகை வைகுதியே. |
(இ - ள்.) அண்ணலாகிய நீயும் தணியாத உள்ளத்தினை யுடையையா யிருக்கின்றாய். வெங்கதிர்க்கடவுள் நீண்ட வொளியினையுடைய தேரானது தோற்றாவண்ணம் மறைந்தனன். நுண்டுளிகளை மேகங்கள் சுரந்தன. இயமனைப்போல யானை முதலிய |