| ரல்லாத கயவர்கள் உளமிருண்டிருப்பது போன்றிருண்ட இரவின் கண் உன்வரையின்கண் வாழ்வார் விழைந்தணிதல் செய்யும் தேனைக் கொட்டுகின்ற மலர்கள் யாவை உரைப்பாயாக வென்றன ளென்க. (வி - ம்.) இங்ஙனங் கூறவே தலைவனே உன்வரை வாழ்வோர்க்குரிய மலரும் விரையும் அணிந்து இரவுக் குறிக்கண் வாரற்கவெனக் கூறினாளாயிற்று. சூழ்ந்தவன் வினாவலாவது : தோழி கூறினமையை யறிந்த தலைமகன் தலைவியின் வரைவாழ்நர் அணியும் மலரினையும் விரையினையும் தானணிந்து வருதற்காக வினாதலென்க. அஃதடுத்த செய்யுளான் விளங்கும். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : இரவுக்குறியிடமுணர்த்துந் தோழி அவனாற்றன்னை வினாவுவித்தல். (385) குறிப்பறி தலைவன் மறித்தெதிர் வினாதல் அஃதாவது சூழ்ந்து அவள் குறிப்பறிந்த தலைவன் தோழியை நோக்கி உங்கள் தலைவியின் குழல்போலிருண்ட இரவின்கண் நும்மவர்கள் மனமுவந்துசூடும் மலரெவை, கலவையாது எனக் கூறாநிற்றல். | | ஞாலங் கருது நகுகதிர் முத்த நகைமடவாள் | | | ஏலங் கமழுங் குழல்போ லிருண்ட விரவினுமர் | | | நீலங் கலந்த நெடுங்கணல் லாய்நெஞ் சுவந்தணியும் | | | கோலங் கனிந்த மலரென் கலவையென் கூறுகவே. |
(இ - ள்.) நீல நிறம் பொருந்திய நெடிய கண்ணினையுடைய தோழியே ஞாலத்துள்ளார் யாவரும் கருதுகின்ற கதிரையுடைய முத்தினையொத்த நகையினையுடையளாகிய மயிர்ச்சாந்து கமழுகின்ற தலைவியி்ன் குழலினைப் போன்றிருண்ட இராக்காலத்தில் நும்மவர் மகிழ்ந்தணியும் அழகு முதிர்ந்த மலர்கள் யாவை கலவைச் சாந்தம் யாவை கூறுக வென்றா னென்க. (வி - ம்.) நுமரென்றது அவரோடு ஒருநிலத்தாராகிய மக்களை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : குறியிட முணர்த்தல். (386) தொடுத்த வினாவுக்குத் தோழிசெப் பிறுத்தல் அஃதாவது குறிப்பறி தலைவன் மறுத்தெதிர் வினாவப் புழுகு, கத்தூரி, கர்ப்பூரம், குங்குமம், பனிநீர், தேனூறுகின்ற தாதுக்களோடுரைத்து எடுத்த சந்தனத்தினை யணிந்த தோளினர் சுனையிடத்துப் பூத்த கள்ளுடன் கூடிய மாலையணிந்தவர்கள் இராக்காலத்தில் எங்கள் மலையின்கட் பொருந்தி விளையாடுபவ ராவரெனக் கூறாநிற்றல். | | புழுகுகத் தூரி கருப்புரங் குங்குமம் பூம்பனிநீர் | | | இழுகுமட் டூறிளந் தாதோ டுரிஞி யெடுத்தசந்தின் | | | முழுகுபொற் றோளினர் கற்சுனைப் பூத்த முழுநெறியின் | | | ஒழுகுகட் டாரின ரெல்லியெங் குன்றினுற் றாடுநரே. |
(இ - ள்.) தலைவனே! இரவின்கண் எங்கள் மலையின்கட் பொருந்தி விளையாட்டினைச் செய்பவர் புனுகு, கத்தூரி, கருப்புரம், குங்குமம், பனிநீர், |