பக்கம் எண் :

1122தணிகைப் புராணம்

 தேக்கிய தேறற் களிவண்டு தன்பெடை சேரக்கண்டு
 நீக்கிய வாவியர் போன்றுயிர்த் தானந்தி நேரிழையே.

(இ - ள்.) நேரிய ஆபரணங்களை யணிந்த தலைவியே! அன்பினாற் கட்டிய கட்டினாற் றழுவிக்கொண்ட மெல்லிய குட்டியினோடு தேனைக் கொட்டுகின்ற பொழிலிடத்துக் குரக்கினங்கள் நித்திரைசெய்யும் மேகங்கள் பொருந்திய மலைநாட்டினையுடைய தலைவன் தேனையுண்டு தெவிட்டெடுத்த களிப்பினையுடைய ஆண்வண்டானது தன்னுரிமைப் பெண்வண்டுடன் சேர்தலைக் கண்ணுற்று உடலினின்றும் நீக்கிய ஆவியினையுடையவர்களைப் போன்று அந்திக்காலத்தே பெருமூச்செறிந்து சென்றானென்க.

(வி - ம்.) தழீஇக்கொண்ட பறழினோடு மந்திகள் துஞ்சுதற்கிடமாகிய பொழிலென்க. பெடைசேரக் கண்டுயிர்த்தானென்க. பெடைசேரக் கண்டுயிர்த்தா னெனவே தலைவியே நின்னை இரவின் குறியிடத்து கூடவிரும்புகின்றான் என்றனள். பறழினோடு மந்திகள் துஞ்சுதற்கிடமாயுள்ள சிலம்பின்கண்ணுள்ள தலைவன் எனவே தலைவியை முறைப்படி அந்தணர் சான்றோரை முன்னிட்டு வரைந்து மக்களை யீன்று இன்பமடைய வறியாது வருந்துகின்றா னென்பதுள்ளுறை. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த இளிவரல். பயன் : தலைமகளை இரவுக்
குறிநேர்வித்தல்.

(389)

ஆங்கவன் வரவு பாங்கி பகர்தல்

அஃதாவது அடல்வேலண்ணல் ஆற்றாமையைக் கூறிய தோழி கொடியாகிய பகைவாடப் பகற்காலத்தவைகட் கஞ்சிய கூகை சென்று முடியையுடைய பகைவேந்தர் போன்று உணவை ஆராய்கின்ற குகைகள் பொருந்திய மலைக்குத் தலைவன் வேடர்கள் வணங்கும் முருகன் விழாவையுங் கண்டு பாணிக்கு வளையல்கள் பகையென்று கண்டார் சொல்லாவண்ணம் இங்கே வருதலைச் சொற்றானெனக் கூறாநிற்றல்.

 கொடிப்பகை சாம்பப் பகலதற் கஞ்சிய கூகைசென்று
 முடிப்பகை வேந்தரின் வேண்டிரை தேர்முழை சூழ்சிலம்பன்
 கடிப்பகை வேடர் பராவுங் கடம்பன் கடியுங்கண்டு
 தொடிப்பகை பாணிக்கென் னாமையிங் கேவரல் சொற்றனனே.

(இ - ள்.) காக்கை யினங்களாகிய பகைவாடப் பகற்பொழுதின் கண் அக்காக்கை யினங்கட்கு அச்சமுற்ற கூகைசென்று முடியணிந்த பகை வேந்தரைப்போலத் தான் விரும்பிய இரையை யாராய்தற்கிடமாகிய முழைகள் சூழ்ந்த மலையினையுடையான், பேயினுக்குப் பகையாக (வெண் சிறுகடுகைப் புகைத்து) வேட்டுவர்கள் வணங்கும் முருகன் விழாவினையும் கண்ணுற்று நினது தோள்களுக்கு வளையல்கள் பகையானவென்று கண்டார் கழறாவண்ணம் இங்கே வருதலைச் சொற்றன னென்றாளென்க.

(வி - ம்.) பகலில் அதற்கஞ்சிய கூகையானது இரவிற் கொடியாகிய தம்பகை சாம்பச்சென்று இரைதேர் சிலம்பென்க. கொடி - காகம். கடிப்பகை - வெண்சிறுகடுகு. இதனைப் புகைத்தால் பேயணுகாதென்பது மரபு. அக்காரணத்தால் வேடர் கடுப்புகைப்ப