பக்கம் எண் :

களவுப் படலம்1123

ரென்க. தலைவன் முருகன் விழவினைத் தரிசித்துத் தலைவியின் கையினுக்கு வளையல் பகையாகுமென்று கூறாவண்ணம். வருவேனென்றா னென்பார். "தொடிப்பகை பாணிக் கென்னாமையாங் கேவரல் சொற்றனன்" என்றார். இதனாற் றலைவன் பிரிவாற்றோள் வாடித்தொடி கழல்வதன் முன்னரே வருவேன் என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைமகன் வரவுணர்த்தல்.

(390)

வரவு கேட்ட மாணிழை கலங்கல்

அஃதாவது ஆங்கவன் வரவினைப் பாங்கி தலைவியிடத்துக் கூறக் கருணைக்கடலாகிய இறைவன் ஆன்மாக்கள் ஆணவமலங் கெடத் திருவுருக்கொண்டு எழுந்தருளினாற்போலத் தலைவர் மிக்கவருளுடையராய் இரவின்கண் ஆளியாகிய பல விலங்குகளின் அச்சமிகுகின்ற சோலையினிடத்துத் தீவினையை யுடைய யான் இருந்துகொண்டு அவர் வருதலைச் செய்தேன் எனக் கூறாநிற்றல்.

 கருணைக் கடல்வளர் வீராட்ட காசக் கடவுளுயிர்
 இருணெக் குடைய வுருக்கொண் டெளிவந்த தென்னவன்னோ
 அருண்மிக் குடையவ ராயிர வூடரி யாளிப்பன்மா
 வெருண்மிக்க சோலை வரலுஞ்செய் தேன்வினை யேனிருந்தே.

(இ - ள்.) (ஆன்மாக்களிடத்துக் கைம்மாறு வேண்டாது) பெருகுகின்ற கருணைக்கடலாகிய வீராட்டகாசத்தின்கண்ணுள்ள இறைவன் ஆன்மாக்களின் ஆணவமலமாகிய இருள்பரிபாகமுற்று நீங்கத் திருவுருக்கொண்டு ஆசாரியனாக எழுந்தருளி எளிதாக வந்தாற்போலத் தலைவர் மிக்கவருளினை யுடையராகி இரவின்கண்ணே ஆளியாகிய பல விலங்குகளின் அச்சமிகுகின்ற சோலையின்கண் தீவினையையுடையயானிருந்து கொண்டு வருதலைச்செய்து கொண்டேன் ஐயகோ என்னை பாவமென்க.

(வி - ம்.) கடல்போல்பவன். இருள் - ஆணவம். வெருள் - அச்சம். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : இரவுக்குறிநேர்தல்.

(391)

துயரினி விடுகெனத் தோழி நயப்பித்தல்

அஃதாவது தலைவன் வருகையைக் கேட்டுக் கலக்கமுற்ற தலைவிக்குத் தோழியானவள் வேடர்கள் எய்தவம்பு எய்த விலக்கினின்றுந் தப்பாத இடமகன்ற சிலம்பினையுடையான் காவற்காட்டினையுங் குறுங் காட்டினையும் உடைய குன்றுகளையும் நீந்திவருதல் உண்மையேயாகும். அவன் வருதற்கு முன்னரே நாம் தளர்ச்சியுற்று நிற்பின் நம்மாட்சியாதாய் முடியுமெனக் கூறாநிற்றல்.

 கானவர் வார்விற் கணைபிழை யாதகண் ணார்சிலம்பன்
 ஏனவண் சூழன் மிளையு மிறும்பி னிறுவரையும்
 தானவ ணீந்தி வருதன்மெய் யேமுன் றளர்ந்துநின்றால்
 மானவ மானகண் ணாயெவ னாகுநம் மாட்சிமையே.