| (இ - ள்.) மான்கூட்டங்கள் நின்கண்ணிற் குவமையாகாமற்றோற்ற கண்ணினையுடையாய் வேட்டுவர்கள் நீண்ட வில்லிற்பூட்டிய கணைகள் இலக்கினின்றுந் தப்பாத இடமகன்ற மலைநாட்டினையுடைய தலைவன் வன்றிகளையுடைய வளம்பொருந்திய சூழலாகிய காவற்காட்டினையும் குறுங்காட்டினையுமுடைய அரைமலைகளையும் அவ்விடத்தினின்றும் நீங்கிக் கடந்து வருதல் உண்மையேயாம். அவன் ஈண்டு வருதற்கு முன்னரே நாந்தளர்ச்சியுற்று நிற்பின் நம்மாட்சியாதாய் முடியுமாதலால் நீ வருந்தற்க என்றாளென்க. (வி - ம்.) வேடர்கள் கணை இலக்கிற்றப்பாதவரை யென்க. ஏனம் - பன்றி. சிலம்பன் காவற் காட்டினையும் குறுங்காட்டினையுடைய அரைமலையினையும் நீந்திவரல் மெய்யேயாகும். அவன் வருமுன்னரே தளர்ந்து நிற்றல் அழகன்றென்பாள். "என்னாகுநம்மாட்சி" யென்றாள். மான் அவமானகண் - மான் கண்ணிற்குவமை பொருளா காமற் றோற்றல். மிளை - காவற் காடு. இறும்பு - குறுங்காடு. வரை - அரைமலை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : இரவுக்குறி நயப்பித்தல். (392) மடம்படு பேதை யுடம்பட் டுரைத்தல் அஃதாவது துயரை இனி விடுவாயாகவென இரவுக்குறி நயப்பித்த தோழிக்குத் தலைமகள் முன்னர்த் தனியேநின்ற சூழலின்கட் பேரின்ப முற்றுவித்தனர். பின்னர் வேழத்தைப் பெயர்த்தளித்தனர். ஒரு சிறிதுந் தன்னோடியைபில்லாத எனக்கு இரவின்கண் வந்து இங்குத் தங்கினர். பெருமை பொருந்திய அவருள்ளம் எவ்வெவற்றை நினைப்பினும் நாம் அவைகளைத் தடுத்துச் சொல்லும் வார்த்தையையுடையோம் அல்லேம் எனக் கூறாநிற்றல். | | முன்னுந் தனிநின்ற சூழலிற் பேரின்ப முற்றுவித்தார் | | | பின்னுந் தறுகட் கடாங்கவிழ் வேழம் பெயர்த்தளித்தார் | | | என்னுந் தமக்கியை பில்லேற் கிரவினு மின்றிறுத்தார் | | | கொன்னுந் திருவுள மின்னுமென் கொள்ளினுங் கூற்றமின்றே. |
(இ - ள்.) முதனிலைக் காட்சியின்கண் நாந்தனியாக நின்ற சூழலின்கண்ணே பேரின்பினை யானடையச் செய்தனர். பின்னர் அஞ்சாமையோடு கூடிய கண்ணினையும் மதநீரைக் கொட்டுகின்ற யானையி னின்றும் பெயர்த்துக் காத்தனர். சிறிதும் தம்முடன் இயைபில்லாத என்பொருட்டு இவ்விரவின்கண்ணும் இங்கேவந்து தங்கினர். பெருமை பொருந்திய அத்தலைவர் திருவுள்ளம் இன்னும் எதைக் கருதினும் அதனைக் கருதி நமக்கொரு மாற்றமுமின்று என்றாளென்க. (வி - ம்.) என்னும் - சிறிதும். கொன் - பெருமை. இறுத்தல் - தங்குதல். கூற்றம் - வார்த்தை. "கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்" என்றாற்போலக் கொள்க. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : இரவுக்குறி யுடம்பட்டுரைத்தல். (393) காய்துயிற் றோழி தாய்துயி லறிதல் அஃதாவது இரவுக்குறி யுடம்பட்டுரைத்த தலைவியினைக் குறியிடத் திற்குக் கொண்டுசெல்ல நீரையுடைய சுனையின்கண் வேலைக்கொண்ட |