| முருகனுக்கு நேர்ந்துவிட்ட வாழைக்கனிகள் துடுமென்னும் ஒலிக்குறிப்பொடு வீழாநிற்கும் என்ன காரணமோ அறியேன். அன்னையே வேறு பரவிவிடவும் என்று கொள்வாய். நான் கூறுவதற் கென்னை யென்றுகூறாய் துயிலினிடத்தும் பொருந்தினையோவென்று கூறாநிற்றல். | | துடுமென வாரிச் சுனையில்வை வேல்கொண்ட தோன்றலுக்கு | | | விடுமென நீயிர் நிறுத்திய வாழைமென் றீங்கனிவீழ்ந் | | | திடுமென காரண மோவினி வேறு பராய்விடவும் | | | படுமெனல் கோடியன் னாயென் னனாய்துயில் பற்றினையே. |
(இ - ள்.) கூர்மை பொருந்திய வேற்படையினைக்கொண்ட தலைவனாகிய முருகனுக்கு நேர்ந்து விடுவோமென்று நீயிர் நிறுத்திய வாழை மரத்தினது மெல்லிய இனிய கனிகள் நீரினையுடைய சுனையிற்றுடுமென்னும் ஒலிக்குறிப்புடன் வீழாநிற்கும் அங்ஙனம் வீழ்தற்குக் காரணம் யாதோவறிகிலேன். இனிவேறு கனிகளை நேர்ந்து பரவிவிடவும் பொருந்துமென்று கூறுதலைக் கொள்வாய். அன்னையே நான் கூறுவதைச் செவியிலேற்று என்னவென்று மறுமாற்றமுந் தருகின்றாயல்லை. தூக்கத்தின்கண் விருப்புற்றனையோ, அறிந்திலே னென்றாளென்க. (வி - ம்.) தலைவனொடு தலைவியை இரவுக் குறிக்கண்ணுய்த்தற் பொருட்டு நித்திரையின்றி யிருக்குந் தோழி யென்பார். "காய்துயிற்றோழி" என்றார். தாய் துயிலும் அமையம் அறிந்து அவ்வமையம் பார்த்து அவ்வமையம் தாயின்றுயிலினை யறிந்து கொள்வான் வேண்டி தாயின்காதில் விழும்வண்ணம் "வேல்கொண்ட தோன்றலுக்கு, விடுமென நீயிர் நிறுத்திய வாழை மென்றீங்கனிவீழ்ந், திடுமென காரணமோ என்றனள். இதற்கும் மறுமொழியில்லாமையால் "வேறு பராய்விடவும் படுமெனல் கோடியன்னா யென்னனாய்" என்றனள். அவள்தூக்க மிகுதியறிந்து தலைவியை இரவுக் குறிக்கணுய்த்தழைத்து வருவாளென்க. துடுமெனல் : ஒலிக்குறிப்பு. மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : இரவுக் குறிநேர்தல். (394) அரை யிருளதன்கண் வருகுவ ரென்றல் அஃதாவது தலைவியை இரவுக் குறிக்கணுய்த்தற்குத் தாய் துயிலறிந்த காய்துயிற் றோழி நல்லாய்! பூந்தாதிற் குளிப்பவையாய் மறைந்திருந்த மூங்கின் முத்தங்கள் மழைத்துளியின் விளங்கு நம் மலைநாடுடையார் நங்கவினளிக்கப் பொருந்திய காலம் ஈதாகுமெனக் கூறாநிற்றல். | | கொட்டிய வேய்மணி சோலைமென் றாதிற் குளிப்பவைதாம் | | | அட்டிய மாரிக் குறுந்துளி யானலங் கும்பொருப்பர் | | | கட்டிய வாரிளங் கொங்கைநல் லாய்நங் கவினளிப்பான் | | | ஒட்டிய காலமு மீதுவல் லேயிங் குறுவரன்றே. |
(இ - ள்.) வாரினாற் கட்டுதலுற்ற முற்றாத தனத்தினையுடைய நல்லவளே மூங்கின்மரங்கள் கொட்டப்பெற்ற முத்தங்கள் சோலையின் கண்ணின்றுதிரும் மெல்லிய தாதின்கண் மூழ்கிக் கிடப்பவைகள் நெருங்கிய மழையின் குறுந்துளியான் விளங்குகின்ற மலைநாடராகிய |