| | பூரண கும்ப முலையிறு மாப்பப் பொதியிருளில் | | | ஆரண மன்ன மொழியா னடல்வேற் கரந்துணையா | | | வாரண மென்ன வயினடுத் தான்மரு மந்தழுவாக் | | | காரண மென்னு மினியில்லை வம்மோ கனங்குழையே. |
(இ - ள்.) கனவிய குழையையுடைய தலைவியே! நிறைகுடம் போன்ற நந்தனங்கள் இறுமாந்திருக்க (இவ்வுலகினை) மூடிய இருளின் கண் வேதத்தையொத்த சொல்லினையுடையான் வலிபொருந்திய வேற்படையைக் கையின்கட் டுணையாகக்கொண்டு யானை யென்னும் வண்ணம் நம் பக்கலிற் சேர்ந்தனன். அவன் மார்பைத் தழுவாமைக்கு இனிக் காரணம் சிறிதுமின்று ஆதலால் வருவாயாக வென்றன ளென்க. (வி - ம்.) உண்மை கூறுதலன்றிப் பொய் யணுவளவையுங் கூறா னென்பார். "ஆரணமன்ன மொழியான்" என்றார். என்னும் - சிறிதும். மோ : முன்னிலையசை. வம் - வருவாய். இதனை, "செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவியாகிடனுடைத்தே" யென்னும் தொல். சொல். எச்சவியற் சூத்திரத்தா னுணர்க. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : குறியிடத்திற் கழைத்தல். (397) குறிவயிற் றலைவியை நெறிவயி னுய்த்தல் அஃதாவது முயங்க வம்மென முற்றிழைக் குரைத்த தோழி முலை யினையுடைய தோழியே! நின் கண்ணானது பகலின்கண்ணே தன்னை நீலோற்பலமாகிய விது ஒக்குமென்று கருதிச்செய்த குவிதலாகிய நோயை இப்பொழுது அக்கண்ணே யடைந்து உறங்கிக்கொண்டிருப்ப தாமென்று இரவிற் சுனைபோலே நீலோற்பலம் மலர்ந்தது. அதனை நீ காண்பாயாகவெனக் கூறாநிற்றல். | | சுனைக்கரு நீல மலர்ந்தது காண்சுணங் கேர்முலையாய் | | | வினைக்கரு ளீசன் வதியும்வெய் யோன்விளங் கும்பகலில் | | | தனைக்கரு வாட்கண் ணிகர்க்குங்கொ லாமிது தானெனச்செய் | | | முனைக்கரு நோயுற் றுறங்குவ தாமென்று மொய்யிருளே. |
(இ - ள்.) சுணங்கா னழகுபெற்ற தனங்களையுடைய தலைவியே (உன் கண்ணானது) ஆன்மாக்கள் செய்த இருவினையின் பக்குவமறிந்து விடையளிக்கும் இறைவன் எழுந்தருளியுள்ள வெங்கதிர் மண்டிலம் விளக்கமுறும் பகற்காலத்தே என்னை நீலோற்பலமாகிய இது ஒக்குமென்று கருதிச்செய்த குவிதலாகிய நோயை இப்பொழுது (அந்நோயை) அக்கண்ணே யடைந்து உறங்குவதாமென்று கருதும்வண்ணம் செறிந்த இவ்விருளின்கண் சுனையின்கண்ணேயுள்ள நீலோற்பலங்கள் மலர்ந்தன. அதனை நீ காண்பாயாக வென்றனளென்க. (வி - ம்.) முலையாய் விளங்கும் பகலில் நீலோற்பலங்களாகிய இவை கரியவாட்கண்ணினை ஒப்பாகுமென்று கருதிக் கண்கள் பகற் காலத்தில் முன்னர் அந்நீலோற்பலங்களுக்குச் செய்தகுவிதலாகிய நோயை இச்செறிந்த இருளின்கண் (கண்களானவை தாம் முன்னர்ச் செய்த) குவிதலாகிய நோயைப்பொருந்தி உறங்குவனவென்று கருதி |