பக்கம் எண் :

1130தணிகைப் புராணம்

(வி - ம்.) இவை உருவகம். உயிரென வந்தவாறு நல்வினையாம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைமகளைச் சார்தல்.

(401)

கலவியிற் றோற்று நலனெடுத் துரைத்தல்

அஃதாவது அன்புமீதூர அளவளாய்க் கலந்த தலைமகன் நோக்க மளிப்பாள் புன்னகையை வெளியிடுவாள் பறவைகளினொலியை வெளி யிடுவாள் ஒரு சேரத் தங்குவாயென்று பசிய தேனையுண்ட வாயுந் துடியா நிற்கும் இவள் குணங்களென்னே யெனக் கூறாநிற்றல்.

 அருகிய நோக்க மளிக்கு மிளநகை யாங்குயிர்க்கும்
 குருகிய லோதை கொழிக்குங் கொழுந்தளிர் போற்றுவளும்
 உருகிய காத லுகக்கு முடங்குறை கென்னப்பைந்தேன்
 பருகிய வாயுந் துடிக்குமின் னேயிவள் பண்புகளே.

(இ - ள்.) சிறக்கணித்துப் பார்ப்பாள், இளஞ்சிரிப்பினை வெளிப் படுத்துவாள், பறவைகளினொலியைக் கண்டத்தினுள்ள வாக்குவாள், செழித்த தளிர் போற்றுவளாநிற்பள், சிறந்த காதலான் மகிழ்வாள் என்னுடன் சேரத் தங்குவா யென்னப் பசிய அதரபானமாகிய தேனையுண்ட இதழ்களும் துடியாநிற்பள் இவள் குணங்கள் இருந்தவா றென்னே யெனக் கூறினானென்க.

(வி - ம்.) நோக்கமளிக்கும். இளநகை யுயிர்க்கும். இவை முதலியன, செய்யுமென்னும் முற்றுச்சொல். சிறக்கணித்தல் - கடைக்க ணோக்கல், குருகிய லோதை கொழித்தல் - புணர்ச்சிக் காலத்தில் குரல் வளைவின் உளவாகும் குயில் புறா முதலியவைகளின் ஒலி போன்ற ஒலி. அதனை அருக்கு மங்கையர் என்னும் திருப்புகழானுண்க. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலை மகளைச் சார்தல்.

(402)

வயந்தரு வேலோ னயந்தவ ணுரைத்தல்

அஃதாவது கலவியிற்றோன்றும் நலனெடுத்துரைத்த தலைவன் அவள் திருமுகத்தினையும் கைகளையும், கால்களையும் அல்குலையும், கண்களையும் தாமரையென உருவக வணியாக்கிக் கூறுவார் தாமரை மலர் போலொளிர்கின்ற பூவை உறுப்புக்கள் இரவினும் பகலினும் சோர்வில்லாமல் இன்பத்தேனைப் பொழிதலை என் போல நுகர்ந்து அறிந்தவர் கூறார்; நுகர்ந்தறியார் உருவக வணியாக்கியே கூறுவரெனக் கூறா நிற்றல்.

 பங்கய மானனஞ் செங்கரம் பாதம் பரவையல்குல்
 செங்கயல் வாட்கண்க ளென்மர் செறியிர வூடெனைப்போற்
 பொங்கய வாழ்க்கை மரைமலர் போலொளிர் பூவையுறுப்
 பிங்கய ராமை மலர்ந்தின்பத் தேன்பொழி வெய்த்திலரே.

(இ - ள்.) மிகுந்த நீரினிடத்து வாழ்தலுறுகின்ற தாமரைப்பூக்களைப் போல விளங்குகின்ற நாகண வாய்ப்புள்ளின் மொழியன்ன மொழியினையுடைய தலைவியின் உறுப்புகள் இவண் சோர்வில்லாது மலர்ந்து இன்பத்தேன் பொழிதலைச் செறிந்த இரவின்கண் என்னை போல