| (வி - ம்.) மின்கொடியே துஞ்சுக. படுக்க, கொள்க, யானும் செல்க வென வியைக்க. என்னாலுண்டாகிய நீரொலியால் நித்திரை கெட்ட மயிலென்க. தலைவன் நீரொலியுண்டாக்கியதனை முந்நூற் றெழுபத்து நான்காம் செய்யுளானறிக. அடுப்பு - அடுதல். விடுப்பு - விடுதல். எடுப்பிய - எழுப்பிய. இருந்தாய் - பெரியதாய். படுப்பிய - படுப்பிக்க. அனந்தல் - துயில். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : புறத்தாரறியாமைப் பிரிதல். (406) நீங்கிய தலைவியைப் பாங்கி சென்றடுத்தல் அஃதாவது தலைவியை நீங்கக்கருதி அவளைத் தலைவன் பாங்கியிற் கூட்டாநிற்க, அணங்கினை யொப்பாய், மக்களுக்கு மகிழ்வினை நிறைக்கும் குமாரலிங்கேசன் சரணைக் கலவாதாரைப்போலப் பசிய கிளைகளிலுள்ள மலர்க்கு முயன்று வருந்தாதே கொள், வண்டுக ளாரவாரிப்ப மலர்ந்த தேனுடன்கூடிய முல்லை மலர்களைக் குழற்குக் கையின்கண் தாங்கிவந்தன னெனக் கூறாநிற்றல். | | குதுகல மார்த்துங் குமாரலிங் கேசன் கொழுஞ்சரணென் | | | பதுகல வாரிற்பைங் கோட்டலர்க் கூக்கிப் பருவரனீ | | | மதுகர மார்ப்ப மலர்ந்துசெந் தேனக்க மௌவன்முல்லை | | | யதுகர மேந்திவந் தேனணி யாய்குழற் காரணங்கே. |
(இ - ள்.) அணங்கு போல்வாளே ! மக்களுக்கு மகிழ்ச்சியை நிறை விக்கும் குமாரலிங்கப் பெருமான் கொழுவிய சரணத்தைக் கலவாதவர் துன்புறுமாறு போலப் பசிய கிளைகளின் கண்ணுள்ள மலர்களைக் கொய்ய முயன்று துன்படையா நிற்க நீ வண்டினமார்ப்ப மலர்ந்து செந்தேன் விளங்கிய மௌவலாகிய முல்லைப் பூவினைக் கரத்தின் கண்ணே தாங்கி வந்தனன் நின்குழற் கணிவாயென்க. (வி - ம்.) கலவாரிற் பருவரற்க. மலர்கொய்ய முயன்றென்க. நக்க - விளங்கிய. மௌவன் முல்லை - இருபெயரொட்டு. குதுகலம் - மகிழ்ச்சி. ஊக்கல் - முயறல். பருவரல் - துன்பம். மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் : தலைவியை யடுத்தல். (407) வல்லிநுண் மருங்குலை இல்லிடை யுய்த்தல் அஃதாவது தலைவனைக் கூடி நீங்கிய தலைவியை அடுத்த பாங்கி பதுமையை யொத்த நல்லவளே ! இடைநோவ விரிசிகையும் காலணியும் ஏங்க அரும்பை யொத்த கொங்கைகள் விம்ம வாசனை மிகக் கட்டுற்ற தலை பிடரிற்சோர விரையச் செல்லற்க ; மெல்ல மெல்லச் செல்வாயாக வெனக் கூறாநிற்றல். | | இட்டிடை நோவ விரிசிகை நூபுர மேங்கமரை | | | மொட்டிகல் பூணிளங் கொங்கைகள் பொங்க முருகுவிம்மக் | | | கட்டிய கூந்தல் பிடர்த்தலை சோரக் கடுகலல்குற் | | | பட்டியல் பாவைநல் லாய்பையப் பையப் படர்மதியே. |
|