| (இ - ள்.) பட்டாடைகள் பொருந்திய பதுமை யொத்த நல்லாய் ! (தனபாரத்தாற்) சுருங்கிய இடையானது வருந்த மேகலையினொரு பேதமாகிய விரிசிகையோடு காலணியும் ஒலிக்க தாமரை யரும்பினோடுமாறு கொண்ட கொங்கைகள் விம்ம வாசனை மிக, (ஆயத்தாரால் ஆராய்ந்து) கட்டுற்ற குழல் பிடரினிடத்து அவிழ்ந்து சோர்வடைய விரைந்து செல்லற்க; மெல்ல மெல்லச் செல்வாயாக வென்றன ளென்க. நல்லாய் நோவ, ஏங்க, பொங்க, விம்ம, சோரக் கடுகற்க மெல்ல மெல்லப் படர்வாயெனக் கொண்டு கூட்டுக. விரிசிகை மேகலையினோர் பேதம். இட்டிடை - சுருங்கிய இடை. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : புறத்தார் அறியாமைப் பிரிதல். (408) தலைவனை யண்மிச் சார்ந்தபி னேங்கலள் அலமரனீங்க வளைபிடி யென்றல் அஃதாவது தோழி தலைவியை இல்லின்க ணுய்த்துத் தலைவனை யண்மி வேறொருவர்க்கில்லாத சிறப்பினையுடைய வீரர்கள் எதிர்வந்து நெருங்கினும் அவர் வீரத்தை நீக்கும் கூரிய வேற்படையை யுடையவனே ! நுங்கள் காவலோடு கூடிய மலையின்கண் சென்று நீ செய்யக் கடவதொன்றுளது. அஃதியாதெனின் ஆற்றின்கண் நினக்கு நேரும் ஊற்றினுக்கஞ்சிப் புலம்பிய பூவையை யொத்த தலைவி வருந்துகின்றன ளாதலால் அவ்வருத்தம் நீங்கற்பொருட்டு நும்மூ ரணிமைக்கண்சென்று அடைந்ததற் கறிகுறியாக வெற்றிச் சங்கைக் குறித்தால் தலைவி சேர்ந்தாயென வருத்தமின்றி யிருப்பாளெனக் கூறாநிற்றல். | | வீற்றுவல் வீரர்மிடையினு மாங்கவர் வீரமுற்றுங் | | | காற்றுவை வேலிறை வாநுங்கள் காவல் வரையிற்சென்று | | | போற்றுவ தாவதொன் றுண்டு புலம்பிய பூவையன்னாள் | | | ஆற்றுவ தாக வலம்புரி வாய்வைத் தருளுவதே. |
(இ - ள்.) வேறொருவர்க்கில்லாத பெருமையையுடைய வீரர்கள் போரினுக்கு மிகவரின் அவ்வீரர்கள் வீரமுற்றும் நீக்குதற் கேதுவாகிய கூர்மை பொருந்திய வேற்படையினையுடையாய் நுங்கள் காத்தற்றொழிலோடு கூடிய வரையின்கட் சென்று போற்றிச் செய்யத் தக்கதொரு காரியமுளது. அது யாதோ வெனின் நின் பிரிவால் வருந்திய பூவையை யொத்த தலைவி ஆற்றுவதாக வலம்புரிச் சங்கினை வாயின்கண் வைத்தருளுவதாகு மென்க. (வி - ம்.) வாய்வைத் தருளுவது ஒருசொல் விழுக்காடு. வீற்று வில்வீரர் - வேறு சிறப்பினையுடைய வீரர். காற்றும் - நீக்கும். தோழி யானவள் தலைவனை யண்மி இறைவ நும் மூர்க்குச் செல்லு நெறிக்கண் விலங்கினங்கள் இயங்கா நிற்கும். அவ்விலங்குகளான் உனக் கேதம் வருமென்றஞ்சி இறைவி வருந்துகின்றாளாகலின் அவ்வருத்தம் நீங்கும் வண்ணம் நும்மூரணிமைக்கட் சென்று அடைந்ததற் கறிகுறியாக வெற்றிச் சங்கைக் குறித்தால் தலைவி நீயூறின்றிப் பதியையடைந்தா யெனத் துன்பின்றியிருப்பாளென்பது துறையின் கருத்து. மெய்ப்பாடு : அச்சம் பயன் : வரைவு கடாதல். (409) |