| இன்னண மொழுகலை மன்னவென் றகற்றல் அஃதாவது தலைவனையடைந்து நீ நின் பதியடைந்த காலத்து வருந்தாதிருத்தற் பொருட்டு வெற்றிச் சங்கினைக் குறிப்பாயென்ற தோழி அம்பலரு மலரும் புதிதாவதல்ல வெனினும் உம்பன் முதலியன ஊறு செய்யா தொழியினும் எம்மை நம்புதலும் காத்தற்றொழில் நின்னிடத்து மிகினும் நீ வருதலாகிய இது நன்றன்று. பிரியாத அன்பு வாய்ந்தவர்களுக்குப் புதுமையான இவ்விருட் காலமும் தாம் வருதற்கொருகாலமாகுமோ வெனக் கூறாநிற்றல். | | அம்பலு மோங்க லரும்புதி தாவதின் றேனுநெறி | | | உம்பலும் யாளியு மேனவு மூறுசெய் யாவிடினும் | | | நம்பலுங் காவலு நின்வயி னீளினு நன்றிதன்றே | | | வம்பலுங் காலங்கொ லோபிரி யாவன்பு வாய்ந்தவர்க்கே. |
(இ - ள்.) (களவொழுக்கத்தின்க ணிகழும் ஒப்பானும், உருவானும் திருவானு மொத்த இருவர் மாட்டுக் கண்டார் நிகழ்த்தும்) அம்பலும் (பல்லாரிடைப் பரவி) உயர்கின்ற அலரும் (தொன்று தொட்டே யுளவாதலன்றி) புதிதாகத் தோன்றியனவல்ல வெனினும் (நீவருகின்ற) நெறிக்கண் யானையும் யாளியும் ஏனைய விலங்கினங்களும் இடையூறு செய்யா தொழியினும், எம்மை நம்புதலும் (எங்களைக்) காத்தலும் நின்னிடத்து மிகினும் (இங்ஙன மொழுகுதலாகிய) இது நல்லதல்லவே. ஒரு வரையொருவர் பிரியாத வன்பு பொருந்தியவர்க்கு புதிய விருட்காலமு மொருகாலமோ வென்றாளென்க. (வி - ம்.) அலரு மம்பலு முன்னரே யுள்ளதாயினும் ஊறு செய்யாவிடினும் நீளினும் நல்லதன்றென்க. புதுமையான இருளும் பிரியாத அன்புடையார்க்கு அல்லு மொருகாலமோ வென்க. அலும் - அல்லும்; விகாரம். எம்மைக் காத்தலும் எங்களை நம்புதலும் உன்னிடத்து மிகுதியாக உளவெனினும் இரவின்கண் நீ வருதலாகிய இது நன்றன்று எனக் கூறியதனால் நீ அந்தணர் சான்றோரை முன்னிட்டு வரைந்து பிரியாதுடனுறைவா யென்றனள். அது "பிரியா வன்பு வாய்ந்தவர்க்கு வம்பலும் காலம் கொல்லோ" என்பதனாலறிக. எம்மைக் காத்தலும் நம்புதலும் உன்னிடத்து மிகினும் நீ வருதலாகிய இது நன்றன்று எனவே இரவுக்குறி மறுத்ததாயிற்று. அம்பல் முகிழ் முகிழ்த்தல். "சிலரும் பலரும் கடைக்க ணோக்கி மூக்கினுச்சி சுட்டு விரல் சேர்த்தி" என்னும் நற்றிணையடிகளானறிக. அலர் - பலரறியச் சொல்லும் சொல். "புதிதாவதன்றே" என்றமையால் அவையிரண்டும் பண்டுள்ளனவென்பது தெளிவாம். மெய்ப்பாடு : அச்சம். பயன் : வரவு விலக்கி வரைவு கடாதல். (410) பாங்கி கேட்பப் பையுளெய்தி நீங்குறுவேலோன் நெஞ்சொடு கிளத்தல் அஃதாவது இன்னண மொழுகன் மன்னனே யென்று அகற்றிய பாங்கி கேட்ப வேட்டுவர் பார்வை மிருகங்களோடு கண்ணிகளைப் புறத்தே இருவி யுள்ளே பொருந்தப் பறவைகளையும் விலங்கினங்களையும் வருத்தும் |