| (வி - ம்.) காவதம் - காதம். வாய்ந்தில உடம்பு முயிருந் தம்முட் சேர்ந்தில. மெய்ப்பாடு : இளிவரல். பயன் : ஆற்றாமை நீங்கல். (412) விளங்கிய மதியிற் றுளங்குறு கிளவி அஃதாவது தமக்குளவாகிய பரிவினைப் பாகற்குரைத்த தலைவனைச் சேரத் தடையாகக் குருவின் மனையாள் விழையக் கொழுந்துவிட்டெழுகின்ற காமத்தினை யறிந்தும் தன்னுடன் பிறந்தாள் மனையை மூடுகின்ற திங்களே ஒன்னார்க்கு உருமேற்றினை யொத்த வரதனாகிய தலைவனை யாங்கள் உறும்வண்ணம் நின்னையொத்த அன்னை துஞ்சினும் நீதுஞ்சாய் எனக் கூறாநிற்றல். | | குருமனை வேட்பக் கொழுந்தெழு காமத்தின் கோளறிந்தும் | | | திருமனை மூடுஞ் செயிர்த்தலை நின்றதிங் காணினையே | | | பொருமனை மாயினு நீமறை யப்புகல் வாய்கொலொன்னார்க் | | | குருமனை யானை வரதனை யாங்க ளுறுவகையே. |
(இ - ள்.) ஆசிரியன் மனையாள் விழையக் கொழுந்துவிட்டெழுகின்ற ஆசையின் குணத்தைக் கண்கூடாக வறிந்திருந்தும் (தன்னுடன் பிறந்தவளாகிய) இலக்குமி (விண்டுவிடம் சேராவண்ணம்) அவள் இல்லாகிய தாமரைப்பூவினைக் குவியச் செய்கின்ற சீற்றத்தின்கண் நிலை பெற்ற திங்களே. பகைவராகிய பாம்பினங்கட்கு இடியேற்றை ஒத்தவனாகிய மேலான தலைவனை யாங்களடையும் வண்ணம் (செயலால்) நின்னையொத்த அன்னை துஞ்சினும் நீ துஞ்சவிரும்புவாயோ விரும்பாய் காண் என்றாள் என்க. (வி - ம்.) பகைவராகிய பாம்பினங்கட்கு இடியேற்றினை ஒத்தவனாகிய மேன்மைதங்கிய தலைவனை யாங்களடையும் வண்ணம் தன்னாரியன் மனைவி விரும்பக் கொழுந்துவிட்டெழா நின்ற காமத்தின் குணத்தைக் காண்டலளவையான் அறிந்திருந்தும் (உன் உடன் பிறந்தவளாகிய) இலக்குமியானவள் தன் கணவனாகிய விண்டுவை அடையா வண்ணம் தன்னில்லமாகிய தாமரைப்பூவினைக் குவியும் வண்ணம் செய்கின்ற சீற்றத்தினிடத்து நிலைபெற்ற வெண்கதிர் மண்டிலமே, செயலால் நின்னையொத்த அன்னையானவள் மறையினும் நீ மறைய விரும்புவாயோ விரும்பாய் என்றாள் என்க. தலைவன்பாற் சேறற்கு நிலவு தடையாயிருத்தலின் சீற்றங் கொண்டு "குருமனை வேட்பக் கோளறிந்தும் திருமனை மூடும் செயிர்த்தலை நின்ற திங்கள்" என்றனள். திங்களைப்போன்று அன்னையும் தடையாதல்பற்றி "நினையே பொருமனை" என்றனள். மெய்ப்பாடு : வெகுளி பயன் : இடையீடறிவித்தல். (413) இராவுறு துயரங் குராலொடு கிளத்தல் அஃதாவது நிலவு வெளிப்பட்டதால் வருந்தா நின்ற தோழி மயிலி னுக்கஞ்சிய நாகங்கள் அவ்வச்ச நீங்கிக் கலந்திருக்கின்ற இரவின்கண் வெல்லப்பாகினைக் குறைவுபடுத்திய சொல்லையுடைய தலைவியானவள் நித்திரை செய்யாத புலம்பலோ டஞ்சும்படியாகக் கூகையாகிய |