| குராலே அஞ்சச் சொற்களைப் பயிற்றாதிருப்பாயாக; புழுக்கலைக் குராமரச் சூழலின் வழங்குதுமெனக் கூறாநிற்றல். | | தோகைக் குராய்த்திரி வஞ்சிய நாகந் துளையிரவில் | | | பாகைக் குராலம் படுத்தசொல் லாள்கண் படாப்புலம்பில் | | | கூகைக் குராலஞ்சச் சொற்பயிற் றாதிகொன் னூன்புழுக்கல் | | | வாகைக் குராமரச் சூழலின் மல்க வழங்குதுமே. |
(இ - ள்.) மயிலினுக்காகப் பகலிற் பெயர்ந்து திரிதற்கஞ்சியிருந்த நாகங்கள் யாவும் அவ்வச்சம் நீங்கிக் கலந்திருக்குந் தன்மையோடு கூடிய இரவின்கண் (இனிமையான) வெல்லப்பாகினைக் குறைவுபடுத்திய சொல்லினையுடைய தலைவி நித்திரை கொள்ளாத புலம்போடஞ் சும்படியாகக் கூகையாகிய குராலே அழகிய சொற்களைப் பயிற்றா திருப்பாயாக. பெருமை பொருந்திய ஊனுடன் கூடிய புழுக்கலை வாகை மரங்களோடுகூடிய குராமரங்களையுடைய சூழலின்கட் தருது மென்றாளென்க. (வி - ம்.) குராலம் - குறைபாடு. கூகையாகிய குராலே - இரு பெயரொட்டு. இதுவிளி. இவையிரண்டும் பாங்கிகூற்று. மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் : இடையீடறிவித்தல். (414) அல்ல குறிப்பாட்டின் மெல்லிடை வருந்தல் அஃதாவது இரவின்கணுற்ற துன்பினைக் குராலொடு கிளந்ததோழி புல்லாற் செய்த ஆடவனை யறியாது உணவென்று கருதி உழுவை பசியோடு வருந்தும் மலைநாட்டவன் கொடுத்த துன்பத்தோடு நல்லவளே மலையிற் பறவைகள் ஒலிப்பது கேட்டு என்னயனங்கள் உறங்காவெனக் கூறாநிற்றல். | | புல்லா டவனை யறியா திரையெனப் போந்தடுத்து | | | நில்லா துழுவை பசியோ டுயங்கு நெடுஞ்சிலம்பன் | | | ஒல்லா தளித்த வுளத்தஞ ரோடுகு நாகத்தொள்வீ | | | நல்லா யிசைப்பது கேட்டுறங் காவென் னயனங்களே. |
(இ - ள்.) (தினைப்புனத்தின்கண் கண்ணேறுக்கஞ்சி) புல்லாற் செய்துவைத்துள்ள ஆண் மகனை (இவன் உண்மையான ஆண்மகனல்லன் புல்லாற் செய்துவைத்த ஆண் வடிவமென அறியாமையான் (அதனை மகனென்று கருதி) சென்று பொருந்திப் புலிகள் நிலைகொள்ளாமல் பசி நோயுடன் வருந்துகின்ற நீண்ட மலைநாடுடையான் (குறியிடத்துப்) பொருந்தாது தந்தருளிய உள்ளத்தின் கண்ணுள்ள துன்பினோடு புன்னை மரத்தின் கண்ணுள்ள பூக்கள், நல்லவளே! (கீழ் வீழ்ந்து) ஒலியுண்டாவதைக் கேட்டுக் கண்கள் உறங்கா வென்க. (வி - ம்.) புல்லாடவன் என்பது தினைப்புனத்தில் கண்ணேறுக்கஞ்சி புல்லான் மனிதனைப்போற் கட்டிவைத்த பதுமையென்க. அப்பாவை மனிதனெனக் கருதி உணற் பொருட்டாகப் புலிகள் வந்து உண்மையை யறிந்து அதன்பின் நில்லாதோடி வருந்தித்திரியும் சிலம்பென்பான். "திரையெனப் போந்தடுத்து நில்லாதுழுவை பசியோ டுயங்கு நெடுஞ்சிலம்" பென்றார். இனி நாகம் மலையெனப் பொருள் கொண்டு வீயென்பதனைப் |