| பறவையெனப் பொருள் கொண்டுரைப்பாருமுளர். புல்லாற் செய்த ஆடவன் போன்ற பதுமையை உண்மையுணராது அடுத்து நிலைகொள்ளாது புலியுயங்குதற்கிடமாகிய சிலம்பெனவே இயற்கையான பூ முதலியன உதிர்வனவற்றை அவன் செய்த குறியாக மருண்டு வருந்தினேன் என்பது இறைச்சி. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அல்ல குறிப்பட்டமை தலைமகற் குணர்த்தல். (415) நையிடை மடந்தை கையறு கிளவி அஃதாவது அல்ல குறிப்பாட்டின்கண் வருந்திய தலைவி அன்றிற் பறவைகளே ! எனைப்போற்றளராது துயில் பொருந்துகின்ற நுந்துயிலின்கண் சகித்தலைப் பொருந்துதற்கரிய நோயை எம்மிடத்துக் காட்டிய வலிமையுடையாரை நுங்கனவின்கண் வரக் கண்டதுண்டோ வெனக் கூறாநிற்றல். | | ஊன்றலைச் சேவற் சிறகரிற் பின்னி யொடுங்கியின்பம் | | | சான்றலைச் சேரன்றில் காளெனைப் போற்றள ராதுதுயில் | | | ஆன்றலைச் சேர்நுங் கனவின் வரக்கண் டறிந்ததுண்டோ | | | நோன்றலைச் சேரரு நோய்தலைக் கூட்டிய நோன்மையரே. |
(இ - ள்.) ஊனைத் தலைக்கண்ணேயுடைத்தாகிய அன்றிற்சேவலின் சிறகிற்பின்னி அதனுடம்பின் கண்ணேயடங்கி இன்ப நிறைதலைப் பொருந்துகின்ற அன்றிற் பறவைகளே! (தலைவனைப் பிரிந்த) என்றனைப் போன்று தளர்ச்சியுறாது துயில் நிறைதலைப் பொருந்துகின்ற கனவின் கண் சகித்தலைப் பொருந்துதற் கரியதாகிய நோயினை எம்மிடத்துக்கூட்டிய வலிமையுடையாரை வரக்கண்ட துளதோவெனக் கூறாநின்றன ளென்க. (வி - ம்.) சகிக்க முடியாத நோயென்பார் "நோன்றலைச்சேரரும் நோய்" என்றார். கூடிய - எம்மிடத்துக் கூடிய. கையறவு - கவலை. நோன்றல் - சகித்தல். மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (416) மாலுறு வருத்தம் நீலமொடு சார்த்தல் அஃதாவது தலைவனை எதிர்ப்படமாட்டாது வருந்தாநின்ற தலைமகள் உற்பலமே இவ்வரையின்கண் குறியிடத்துப் பொய்த்து வருத்தும் தண்ணளியில்லாத தலைவனை யானுடைத்தாயிருப்பதுபோல நீயுமுடையாய் போலுமெனக் கூறாநிற்றல். | | கண்ணீ்ர் கவிழ்த்துக் கருந்துக ளாடிக் கருகிநெகிழ்ந் | | | துண்ணீர் கழிய வெளிவந்து நின்றனை யுற்பலமே | | | விண்ணீள் வரையி னெனைப்போற் குறிபொய்த்து மெல்குவிக்கும் | | | தண்ணீ ரிலாத தலைவனை நீயுங்கொல் சாற்றுகவே. |
(இ - ள்.) நீலோற்பலமே! கள்ளாகிய நீரைக் கொட்டிக் கரிய மகரந்தங்களினால் மூடப்பெற்று முகங்கறுத்துக் கட்டவிழ்ந்து குளத்தின் கண்ணுள்ள நீரினின்றும் மேலேயெழ வெளிப்பட்டு நின்றனை ; |