| | பொறிகா ணுமக்குப் புலனனி யார்த்திய போதுஞ்செல்லும் | | | நெறிகா ணுதற்குத் துயவுறு வீரின்று நேர்ந்ததில்லை | | | வெறிகான் மலர்க்குழ லாளைவிட் டெங்ஙன மீளுகிற்பீர் | | | குறிகா ணுதற்குநெஞ் சேமுயன் றாய்குழைந் தாய்திரும்பே. |
(இ - ள்.) பொறிகளே! நுமக்குத் தலைவியினிடத்துக் கண்டு கேட்டுண்டுயிர்த்தலாகிய புலன்களையும் பொருந்தச் செய்த காலத்தும் (அவளை விட்டுப் பிரிதற்கு மனமின்மையால்) செல்லு மார்க்க மறிதற்கு வருந்துவீர்கள் (அவளின்று குறியிடத்தில்) எதிர்ப்பட்டாளில்லை. வாசனையை வெளியிடுகின்ற மலரையணிந்த கூந்தலையுடைய தலைவியை (குறியிடத்து வந்தெதிர்ப்படு வாளாயின் அவளோடு கூடி) எங்ஙன மீளுவீர்கள். நெஞ்சமே குறியிடத்தைக் காணும் பொருட்டு முயன்றனையாய் வருந்தினை திரும்புவாயெனக் கூறாநின்றானென்க. (வி - ம்.) பொறிகளே முன்னர்த் தலைவியோடு கூடிய காலத்துயான் ஆர்த்தியும் அவளை விட்டுப் பிரிதற்கு மனமின்மையால் திரும்பி வருதற்கு வருந்துவீர். அவளின்று குறியிடத் தெதிர்ப்பட்டாளில்லை. அவளை இப்பொழுது கூடுவீரேல் எவ்வாறு மீளுவீர் என்பான் "பொறிகாணுமக்குப் புலனனியார்த்தியபோதுந் துயவுறுவீர் நேர்ந்ததில்லை. குழலாளை எங்ஙன மீளுகிற்பீர் என்றனன். நெஞ்சமே முயன்றனை திரும்புவாயென்பார்"குறி காணுதற்கு நெஞ்சமே முயன்றாய் குழைந்தாய் திரும்பே என்றார். தலைவியுடன் புணர்ச்சிக் காலத்துச் சேர்ந்த தலைவன் ஐம்பொறிகளும் அச்சேர்க்கையினின்று பிரிதலைக் கருதி வருந்துதலின் "செல்லும் நெறிகாணுதற்குத் துயவுறுவீர்" என்றார். கூட்டத்திலின்ப நுகர்ந்த மகிழ்ச்சியுடன் பிரியவேண்டிய நீர் அதனை யயர்த்துப் பிரிதற்குத் துயரமுறு நீர் இன்று தலைவி வாராதிருப்ப எங்ஙன மீளுவீரென்பார் "துயவுறுவீர்" என்றாரென்க. குறிதலைச் சென்றோன் நெறிகவன் றிறத்தல் - குறியிடத்துச் செல்லும் தலைவன் இடையில் வருந்திக் கடந்து போதல். ஆர்த்தல் - கண்டு கேட்டுண்டுயிர்த்துற்றின் படைதல். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றாமை நீங்கல். (419) காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறு கிளவி அஃதாவது குறியிடத்துச் சென்ற தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி வேங்கையின்கண் வண்டுகள் ஒலித்து மொய்ப்பதனை யாமென்று மறியோம். இன்றைக்கு மொய்ப்பன, யான் திருந்துதற் கேதுவாகிய தோழியே! அதனை ஆராய்வாய் நங்குறி தப்பி நீங்கினவருடைய நறு நாற்றமுடைய செங்கழுநீர் மாலை நம்முயிர் வருந்தியபோது அவ்வருத்த நீக்கற்கு மேலாகிய மருந்தாய் விளங்குகின்றதெனக் கூறாநிற்றல். | | எறிந்தளி வேங்கையின் மூசுவ தென்றுமெய் யாமின்றிதோ | | | செறிந்தலர் வேங்கையின் மொய்ப்பவன் னாய்திருந் தேடியிங்கே | | | மறிந்தளி யேமுயிர் மாழ்கிய போதைக்கு வான்மருந்தாய்ப் | | | பிறிந்தவர் செங்கழு நீர்நறுங் கோதை பிறங்குவதே. |
|