| காமஞ் சிறந்து காதலி கிளத்தல் அஃதாவது புகாக்காலைப் புக்கெதிர்ப்பட்டுழி பகாவிருந்தினை விழைந்த தலைவி முற்பிறவியிலன்றி உடலெடுத்து "இப்பிறவியி லன்பினே மாயினம் என்று கருதிய என்னுளத்தினைப் போன்று அவருளமுங் கருதின் யான் இரவூடழிதல் ஒரு சிறிதுமில்லையெனக் கூறாநிற்றல். | | துணைபுண ரன்றி லுடல்பல கோடி தொடர்ந்தெடுத்தே | | | இணைபுண ரன்பின மீண்டையென் றேற்றிய வென்னுளம்போற் | | | கணைபுண ரங்கையி னாருளந் தானுங் கருதினன்னாய் | | | அணைபுண ரன்றறி யாதிர வூடழி வாசுமின்றே. |
(இ - ள்.) தோழியே, யானும் தலைவரும் துணையுடன் கூடுகின்ற அன்றிற் பறவையின் உடலைப் பல பிறப்பினுங் கோடிக்கணக்காக (யாங்களெடுத்த காரணத்தான்) இப்பிறவியிலிணைந்து கூடுதற்குரிய அன்பையுடையே மாயினேமென்று கருதிய என்னுளத்தினைப் போன்று (பகைவரை வருத்துங் கணைகள் பொருந்திய அழகிய கையினையுடைய) தலைவருள்ளமும் கருதுமாயின் அவர் அணையிற் புணர்தலை யறியாது இவள் பல் பிறப்புக்களின் நம்மோடு தொடர்புடையாள் என்று கருதி வரைந்து கொள்ளின் இரவூடு வருந்தல் சிறிதுமின்றென்றா ளென்க. (வி - ம்.) அன்றிற் பறவைகள் ஒன்றினை யொன்று பிரியாதாகையான் துணைபுணரன்றிலுடல் பல கோடி தொடர்ந்தெடுத்தே இணைபுணரன்பினம் எனக் கூறினாள். ஏற்றிய - கருதிய. இதனை "ஏற்றம் நினைவும் துணிவுமாகும்" என்னும் தொல். சொல். உரியியலாலுணர்க. இவள் பல் பிறப்புக்களின் நம்மோடு தொடர்புடையாளென்று கருதி வரைந்துகொள்ளின் என்பது குறிப்பெச்சம். ஆசு - சிறுமை. கருதின் அணையிற் புணர்தல் உலகம் அறியாது எனினும் பொருந்தும். இப் பொருட்கு உலகில் அம்பலுண்டாகா தென்பது கருத்து. மெய்ப்பாடு : அச்சம். பயன் : ஆற்றாமை நீங்கி வரைவு கடாதல். (423) நாணு மிகவர நன்னுதல் கிளத்தல் அஃதாவது காமஞ்சிறந்து கழறிய தலைவிக்கு இயல்பாகிய நாணம் அதிகரிக்க மன்னனே இடம் பெரிதாகிய நின்னுள்ளமானது இங்கே பொருந்தி எங்களை விரும்புதற்கிடஞ் சிறியதாய காலத்தும் என் பேதை யுள்ளமானது நாணுக்கிடமாயது. அதனால் ஒன்றும் சொல்லாளெனத் தோழி கூறாநிற்றல். | | வீணுக் கிடம்பெரி தாகிய நின்னுள மேவியிங்கே | | | பேணுக் கிடஞ்சிறி தாகிய ஞான்றுமென் பேதையுளம் | | | நாணுக் கிடம்பெரி தாயது காணே னவிற்றுவது | | | பூணுக் கிடம்பெரி தாகிய மார்பத்துப் போர்மன்னனே. |
(இ - ள்.) (பலவகைப்பட்ட) அணிகள் அணிதற்கிடம் பெரிதாகிய மார்பினையுடைய போர்த் தொழிலின்கட் கைபோய தலைவனே (உலகர் கூறும் அம்பலு மலருமாகிய) வீண் தொழிலுக்கிடம் பெரிதாய |