பக்கம் எண் :

1146தணிகைப் புராணம்

 கருமுச்சி வன்முலை யாய்கவி னீங்குக் கழியவன்பர்
 இருமுச் சிவமத முந்தரு மீச னிருஞ்சினம்போன்
 றுருமுச் சிவந்து ரறுந்தடஞ் சார லுலந்தமணி
 தருமுச் சிவன்பணி யாறியங் காதிருந் தாலுநன்றே.

(இ - ள்.) கரிய உச்சியினையுடைய சூதாடு கருவி போன்ற முலையினையுடைய தோழியே ! நம் வனப்பு இங்குக்கழிய அறுவகைச் சிவமதத்தினையு முளவாக்கும் இறைவன் சீற்றம் போன்று இடியானது கோபித்து ஒலிக்கும் பெருமை பொருந்திய மலைப்பக்கத்தின்கண் திரண்ட மணிகளைத் தருகின்ற உச்சியினையுடைய வலிய பாம்புகளியங்கா நின்ற வழியினிடத்து இயங்குதலின்றி அவரூர்க்கண் இருந்தாலும் நல்லதாமென்றா ளென்க.

(வி - ம்.) கருமுச்சி வல்முலையாய் - கரியநுனி பொருந்திய சூதாடு கருவிபோன்ற முலையினையுடையாய் எனத் தனத்திற் கடையாக்குக. இருமுச் சிவமதம் - ஐக்கியவாத சைவம், பாடாணவாத சைவம் முதலியன அவற்றைச் சங்கற்ப நிராகரணத்திற் காண்க. சினம் போலுரறுஞ் சாரலென்க. உச்சி - முச்சி. உலந்தமணி - திரண்டமணி. கவின் ஈங்குக் கழிய அன்பர் பணிகளியங்கும் ஆறியங்கா திருத்தல் நன்றாமென முடிக்க. உருமு - இடி. உரறல் - ஒலித்தல். மெய்ப்பாடு : அச்சம். பயன் : வரைவு கடாதல்.

(426)

இதுவிது படுமிர வேந்தல் வரவும்
விதுநுதற்கின்பம் விளைத்தில தென்றல்

அஃதாவது ஆற்றது தீமை யறிவுற்றுக் கலங்கற் கேதுவாகச் சந்திரன் பொருந்து மிரவின்கண் தலைவன் வருதலால் தலைவிக் கின்பமுளதா மாறில்லையெனக் கூறாநிற்றல்.

 ஊர்விழ வாயினு மில்விழ வாயினு மூர்கொண்டும்ப
 ரார்விழை வாண்மதி தோன்றினுங் கூகை யறைபறையோர்
 கார்விழை யேறு கடுமுரண் மான்குரல் காதுறினும்
 போர்விழை தார்ப்புய னாருயிர் மாழ்குநம் பூங்கொடியே.

(இ - ள்.) போரினை விழைகின்ற மாலையணிந்த புயத்தையுடைய வனே! ஊரின்கண் (மதுரை ஆவணி அவிட்டம், உறையூர் உள்ளிவிழா, கருவூர்ப் பங்குனி யுத்திரம் போன்ற) விழவாயிருப்பினும், இல்லின் கண் மக்கள் விரும்பிச் செய்யும் கலியாண முதலிய விழவாயிருப்பினும் பரிவேடத்தினைக் கொண்டு தேவர்கள் விழையத்தக்க ஒளியுடன்கூடிய சந்திரமண்டிலந் தோன்றினும், கோட்டான், அறைகின்ற பறையோர், மேகம் விரும்புகின்ற இடியேறு வலிய மாறுபாட்டினையுடைய புலி முதலியவைகளின் ஒலி காதின்கட் பொருந்தினும் பூங்கொடி போல்வாள் மாழ்குவா ளாதலான் வரைந்து சென்று இன்பமுறும் வண்ணம் வைப்பா யென்றன ளென்க.

(வி - ம்.) இல்விழவு - சந்திரனைப் பரிவேடஞ்சூழின் ஆண்டுள்ள மக்கள் மணவிழாக் கொண்டாடுவர். அதனை இல்விழவு என்றார். தேவர்கள்