| | புல்குந் துயிலிற் படாது விழிபொழி நீர்திளைக்க | | | நல்குந் தலைவரென் னோய்காணன் மாரினி நன்னுதலே. |
(இ - ள்.) நல்ல நெற்றியினையுடைய தோழியே, நிறைந்த பசப்பின்கண் மதியினை யொத்த நுதலும் யானையின் மருப்பினை வென்ற குங்குமக் குழம்பினை யணிந்த தனங்களும் மூழ்காநிற்கக் கடலாற் சூழப்பட்ட உலகம் முழுதும் பொருந்துகின்ற துயிலின்கட் பொருந்தாது விழிகள் பொழிகின்ற கண்ணீரின்கட் டிளைக்க நமக்கு அருளினைச் செய்த தலைவர் யானுற்ற நோயினைக் காணுவாரல்லரெனக் கூறாநின்றன ளென்க. (வி - ம்.) நுதலும் முலையும் பசப்பில் மூழ்கவும் விழிநீர் திளைக்கவும் எனக்கு நல்கிய தலைவர் "நோய் காணன்மார்" என இகழ்ந்து கூறியமை காண்க. நோய் காணன்மார் என்பதை "பாடன்மார்" என்பது போலக் கொள்க. பசத்தல் - பசலை பாய்தல் இதனை 1240ஆம் குறளானறிக. மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவு கடாதல். (429) மைப்பட்ட கண்ணி கைப்பட்டுக் கலங்கல் அஃதாவது தலைவன் வந்த காலத்துத் தலைவி வருந்தி அவனை யிகழ்ந்து அவனங்கே நீங்கிய காலத்துக் கவலையை மிகவு முளவாக்கிக் கூடுந்தன்மையைக் கருதி நிற்கின்ற என் நெஞ்சின் நிறையினை நீக்கியவர் என்னைக்கூடப் பொருந்திய காலத்து மகிழ்ச்சி பெரிதாகுங் குணந்தோன்றாது துன்பமிக்காவதற்குக் காரணம் என்னை யென்றுகடாவுதல். | | தணந்தொழி காலை யெலாமே சறவு தகப்பெருக்கி | | | நிணந்திடு நீருள்ளி நிற்குமென் னெஞ்ச நிறைநெகிழ்த்தார் | | | மணந்திட முற்றிவ ளாவிய ஞான்று மகிழ்பெரிதாம் | | | குணந்திக ழாதல்லன் மிக்காவ தென்னிதன் கோளணங்கே. |
(இ - ள்.) தெய்வப் பெண்போல்வாளே ! (தலைவர் என்னை) நீங்கி யொழிந்த காலத்திலெல்லாம் ஏக்கத்தினை மிகவுளவாக்கிப் பசைந்திடுகின்ற நீர்மையை நினைத்து நிற்கின்ற என் நெஞ்சத்தின்கண் ணுள்ள நிறையினை நெகிழச் செய்த தலைவர். என்னைக்கூட வணைந்து பொருந்திய காலத்தும் மகிழ்ச்சி பெரிதாங்குணம் மிக்குத்தோன்றாது துன்பமிக்குத் தோன்றுவதாகிய இதன் குணமென்னை யென்றன ளென்க. (வி - ம்.) ஏசறவைத்தணந் தொழிந்த காலையெல்லாம் பெருக்கி என்க. ஏசறவு - ஏக்கம். நிணந்திடும் நீர்மை - பசந்திடும் தன்மை. பசைதல் - அன்புடையராந்தன்மை. "பசைந்தாரிற்றீர்தலிற் தீப்புகுதல் நன்று" என்றார் பிறரும். அல்லல் - பிரிவு நிகழுமே என உளவாகும் துக்கமென்க. கைப்பட்டு - தலைவனது கையின்கட்பட்டு. கலங்கல் - வருந்தல். நிறை - கற்பு. வளவிய - கலந்த முற்றி யடைந்து. மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவு கடாதல். (430) பகற்குறி விழைந்தோன் பறவையினோக்கி நகைக்கதிர் வேலோற்கு நவிற்றிது வென்றல் அஃதாவது தலைவி தலைவன் வயப்பட்டுக் கலங்கிய காலத்துச் செவ்வேள் விரும்பித் தங்கிய காவிவரை குறித்துச் செல்லும் குருகீர் தம்மை |