| யடைந்தார் வருந்த நீங்கிய தலைவரையண்மி உம்மையில்லாமல் உய்யா ளாகிய தலைவி தினையைக் காவல்கொண்டாளெனச் சொல்லுங்களெனக் கூறாநிற்றல். | | அளம்படு வார்துரும் பண்மினர் நேர வமர்ந்தசெவ்வேள் | | | இளம்பொழிற் காவி வரைகுறித் தேகு மெழிற்குருகீர் | | | உளம்படர் கூர வொழிந்தாரை யண்மியும் மன்றியுய்யாள் | | | வளம்படு மேனலங் காவல்கொண் டாளென்று வாய்விடுமே. |
(இ - ள்.) செவ்வேள் விழைந்து தங்கிய இளமரக்காக்களையுடைய காவிமலையைக் கருதிச் செல்கின்ற குருகினங்களே ! (தம்மை யடைந்தார்) கடலின்கட் பொருந்திய துரும்பினை (கரைசேறற்குத் தெப்பமாக) அடுத்தாரை யொப்ப உள்ளத்தின்கட் டுன்பம் மிகுதற் கேதுவாகப் பிரிந்த தலைவரை யண்மி உம்மையின்றி யுய்யாளாகிய தலைவி வளப்பத்தினையுடைய தினைப்புனத்தினைக் காவல் கொண்டனள். ஆதலான் நீவிர் இரவுக்குறிக்கண் வரற்பாலீரல்லீர் பகற்குறிக் கண் வருகவெனச் சொல்வீர்களாக வென்றன ளென்க. (வி - ம்.) அண்மினர் அளம்படு துரும்புநேர அமர்ந்த செவ்வேள் எனச் செவ்வேளுக்கு அடையாக்கலுமாம். நோய்கூர அண்மிக்காவல் கொண்டாள். உய்யாளென முடிக்க. அளம் ஆகுபெயரான் கடலை யுணர்த்திற்று. இரவுக் குறிக்கண் வரற்பாலரல்லீர் பகற்குறிக்கண் வருக வென்பது குறிப்பெச்சம். கடலில் அலைகின்ற துரும்பினைத் தெப்பமாக வண்மினவர் எவ்வாறு துன்புறுவரோ அதுபோல உளம்படர் கூர ஒழிந்த தலைவர் என்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : இரவுக்குறி விலக்குதல். (431) முற்றிழை மடந்தை பெற்றவழி மலிதல் அஃதாவது பகற்குறி விழைந்து பறவையை நோக்கிக் கூறிய தலைவி பூரிப்படைந்த கொங்கைகள் அழுந்தும் வண்ணம் புல்லலினிதாகும். அதனாற் பயன் என்னை? பொங்கரை அலைத்து உளர்கின்ற வாடைக் காற்றான் யான் மெலிவதை யறியாத நின்னோடு கூட்டுமாகும் பகல் சிலவாகிவிட்டன வெனக் கூறாநிற்றல். | | பூரித்த கொங்கை ஞெமுங்கக் கரம்புறஞ் சூழ்ந்திறுகப் | | | பாரித்த நின்புயம் புல்லினி தேபய னென்னையென்னை | | | வேரித்தண் பொங்கர லைத்துளர் வாடை மெலிவறியாச் | | | சீரித்த நின்னோ டெமியாம் பகல்சில வாய்விட்டதே. |
(இ - ள்.) நறுநாற்றம் பொருந்திய குளிர்ந்த சோலையினை வருத்தி உளர்தலைச் செய்கின்ற வாடைக் காற்றான் யான் மெலிவதனை யறியாத சிறப்புப் பொருந்திய நின்னொடு கூட்டமாகும் பகற்காலம் சிலவாகிவிட்டன ஆதலான் பெருத்த தனங்கள் (உன் மார்பினை) தழுவக் கைகள் புறத்தின் கண்ணே சுற்றி இறுக்கும் வண்ணம் பருத்த நின்புயங்களைப் புல்லுதல் எனக்கினிதாயினும் அங்ஙனம் புல்லுதலான் பயனென்னை அதனாற் பயனொன்றுமில்லை யென்க. |