| (இ - ள்.) கிளிமொழி யன்ன மொழியினையுடையாய் ! இடமிடங் கடோறும் தினைத்தாள் பலப்பலவாகித் தோன்றின. (இங்ஙனம் தினை கொய்த) இதனை எம்மவர் ஆராய்ந்து நம்மைப் புனத்தின்கணின்றும் நீக்கி இற்செறித்துக் காவலினைக் கொள்வராயின் மின் முதலிய தொகுதியினையுடைய மேகங்கள் சுற்றிய மலைநாடனை இரையினைத் தேடிவராநின்ற கிளியினை யோப்பு மிடமிடங்க டோறும் பொருந்துதலுற்றுக் காண்டலரிதாகுமென்றா ளென்க. (வி - ம்.) இனியொரு சாரார் இருவியென்பது ஆகுபெயராய் தினைப்பயிரெனக்கொண்டு தினைப்பயிர் இதோ தோன்றின. இதனை நினைத்து இல்லின்கணின்று நம்மை நீக்கி நம்மைப் புனங்காவலுக்கனுப் பினதைத் தலைவரறியாது ஈண்டு வந்து துன்புறுவராதலின் தினைப்புனத்திற் கிளியோப்பு மிடமிடங்கடோறும் துன்னிக் காண்பரிதாகுமெனக் கூறுவர். ஏற்பன கருதிக்கொள்க. இருவி - தினைத்தாள். ஈதுதினையறுத்த லாகியவது நம்மைப் புனமொருவி யென்க. காவல் கோடல் - இற்செறித்துக் காவல்கோடல். இரண்டாவதுரைக்கு நம்மை ஒருவி - நம்மை இல்லினின்றும் நீக்கி. புனங்காவல் கொண்டால் - தினப்புனங் காக்கச்செயின், கருவி - மின் முதலாகிய தொகுதி. துருவல் - ஆராய்தல். துன்னல் - சேர்தல். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (434) இட்டிடை மடந்தை விட்டுயிர்த் தழுங்கல் அஃதாவது பைந்தொடித் தலைவியைக் கழறிய பாங்கிக்கு இடையை யுடைய தோழியே ! என்னை யானே ஏவலின்க ணிறுத்தும் இயல்பினை அன்னைக்குரைப்ப விரைந்தெழுகின்ற மனம் அவ்வியல்பினைத் தாயினுக்குக் கரத்தலே தகுமென்று நினைக்கும் நமர்க்கு யான் ஏவலின் நின்றமையினை உயிர்கெடினும் விள்ளற்க வெனக் கூறாநிற்றல். | | என்னைக் கெனைவியங் கோளி னிறுவு மியல்பொருகால் | | | அன்னைக் குரைப்ப விரைந்தெழு நெஞ்சங்ங னேபெரிதும் | | | தன்னைக் கரத்த றகுமெனு நீயுயிர் சாய்ந்திறினும் | | | மின்னைக் கவற்று மிடையாய் நமர்க்கது விள்ளலையே. |
(இ - ள்.) மின்னற் கொடியினை வருத்தும் தன்மையினையுடைய இடையினையுடைய தோழியே ! என் றலைவனுக்கு என்னை யானே ஏவலின் நிறுவிய இயல்பினை தாய்க்குரைப்ப எழுந்த என் நெஞ்சமானது தாய்க்குக் கரத்தலே தகுமென நினையாநிற்கும் நீயுயிர் கெடினும் நம்மவர்க்கு (நான் ஏவலின் நின்றமையாகிய) அதனை விள்ளாதே யென்றா ளென்க. (வி - ம்.) என் ஐக்கு - எனப் பிரிக்க. வியங்கோள் - ஏவல். ஏவலின் நிறுவிய இயல்பை எனக்கொள்க. ஏவலின் நின்றமை கூட்டத்தை யுணர்த்தலான் இடக்கர். உயிர்த்தல் - சொல்லுதல். தன்னுள்ளக் கருத்தைத் தோழியிடம் வெளியிட்டு வருந்தல். உயிர்த்தல் - கூறுதல் : இதனைத் தொல். பொருள் : களவியல் 273ஆம் பக்கத்தில் (273) காண்க (தாமோதரம் பிள்ளை பதிப்பு.) மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (435) |