பக்கம் எண் :

களவுப் படலம்1153

(வி - ம்.) தலைவன் ஊரின்கட் செல்லின் எந்நாளும் இன்பமெய்தலா மென்னுங் கருத்தால் "அந்நாளகன்றில மென்றார் பதிசென்றடுத்தும் வம்மே." என்றாள். அடுத்தும் - அடுப்போம். வம்மோ - வருவாய். மோ : முன்னிலையசை. தலைவனூர்க்குச் சென்று அவனுடன் கூடித் துன்பமற்றிருப்போ மென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல்.

(437)

ஆங்கவ னூர்புகப் பாங்கிக் குரைத்தல்

அஃதாவது தலைவனூர் புகுதற்கு நெஞ்சினோடு கிளந்த தலைவி தோழியே பலரறிய எழுந்த அலர் எங்கும் எழுக. என் பெண்மை முழுதும் விளிக. எங்களைத் துயரின் மூழ்கவிடுவது நுமக்காண்மையோ வென்றறைவதற்கு அவரூர்க்குச் செல்வாமெனக் கூறாநிற்றல்.

 எழுந்த வலரின்னு மெங்கு மெழுக விடைமுரிந்து
 விழுந்தவென் பெண்மை விழுந்தே முழுதும் விளிகவினிச்
 செழுந்தண் மதிமுகத் தாயன்ப ரூர்க்குச்செல் வாந்துயரின்
 அழுந்த விடுப்பது மாண்மைகொ லாமென் றறைவதற்கே.

(இ - ள்.) செழித்த குளிர்ந்த மதிபோன்ற முகத்தினையுடைய தோழியே ! (யான் தலைவருடன் கூடிய காரணத்தான்) தோன்றி அலர்மேலு மெல்லாவிடத்தினு மெழுவதாக இடையிலே முரிந்து கேடுற்ற என் பெண்மைக்குண முழுதும் விழுந்து கெடுவதாக. (உன்னைப் பற்றுக்கோடாகக் கருதின மாதரை) துன்பத்தின் கண்ணே மூழ்கவிடுப்பதும் ஆண்டன்மையாகுமோ வென்று சொல்வதற்கு (நம் மாட்டு) அன்பினை யுடையா ரூர்க்குச் செல்வா மென்றன ளென்க.

(வி - ம்.) எழுக, விளிக அறைவதற்குச் செல்வாமென்க. சில ரறிய வெழுந்தவலர் பலருமறிக வென்பாள் "எழுந்த வலரின்னு மெங்கு மெழுக" என்றாள். மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல்.

(438)

நொந்துதெளி வொழித்தமை பைந்தொடி கிளத்தல்

அஃதாவது ஆங்கவனூர்புகப் பாங்கிக்குரைத்த தலைவி தெய்வத நோக்கிக் கையினை யெடுத்துக் குற்றந்தங்கிய வாய்மொழியாகக் கருதாதே என்று மார்பராற் றெளி வொழிக்கப்பெற்ற எனக்கு ஒரு வேற்றுமையில்லை. பிரையுற்ற பாலினைப் போன்று பெற்றியானது எனக்கு எஞ்ஞான்றும் பிறழ்ந்தில தெனக் கூறாநிற்றல்.

 வரையுறை தெய்வத நோக்கி மலர்க்கை விசும்பெடுத்துப்
 புரையுறை வாய்மொழி யாகப் புகலல் புகலலென
 விரையுறை மார்பர் தெளிவொழித் தேற்கொரு வேற்றுமையில்
 பிரையுறை பாலன்ன பெற்றியெஞ் ஞான்றும் பிறழ்ந்திலதே.

(இ - ள்.) இவ்வரையின் கண்ணே தங்குகின்ற தெய்வத்தை நோக்கி மலர்போன்ற கையினை விசும்பின் கண்ணே தூக்கிக் குற்றம் பொருந்திய சத்திய வார்த்தையாகக் கருதாதே யென்று வாசனை