| தன்னையர் தந்தை தாமறிந்தோவென் றன்னதி னெழுந்த வச்சமிக் குரைத்தல் அஃதாவது துன்பினை நோக்க அச்சமிக் குரைத்த தலைவி தணியாத காதலாகிய கரையின்கட் பொருந்தி உள்ளமானது அலைய வாராதுவிட்டது வேற்று நிலத்தோர் சாராத இவ்வரையின்கண்ணுள்ள எந்தந்தையை அறிந்தோ அஞ்சாத நோக்கார் என் தமையன்மாரைக்கண்டோவெனக் கூறாநிற்றல். | | ஆராத காத லகன்கரைப் பட்டுள்ள மாழ்ந்தலைய | | | வாராது காவலர் விட்டது வேற்று வரைநிலத்தோர் | | | சாராத விவ்வரை வாய்வர வெந்தை தமையறிந்தோ | | | சூராத நோக்கொடு மென்னையர்க் கண்டுகொல் சூழ்ந்திலனே. |
(இ - ள்.) வேறு வரையினோடு கூடிய நிலத்தின்கண்ணுள்ள மக்கள் பொருந்துதற் கியலாத இம்மலையின்கண் தான் வருதல் என் தந்தைமார் தாமறிதலாலோ எதனுக்கு மச்சங்கொள்ளாத நோக்கினோடு கூடிய என் தமையன் மாரைக் கண்ணுற்றோ (ஈண்டுக்) காவலர் வாராமை நீங்கியது யாதோ ஆராய்ந்தில னென்றா ளென்க. (வி - ம்.) எம் தந்தை என்பது எந்தை என் றாயவாறுபோல தன் அன்னையர், என் அன்னையர் என்பன தன்னையரென்றும், என்னையரென்றும் ஆதல் அறிக. வரவு சூழ்ந்திலனென முடிக்க. சூராத - அஞ்சாத கரையென்பது ஆகுபெயரான் கடலையுணர்த்திற்று. "எந்தையர் தாமறிந்தோ" என்றும் பாடம். எந்தை தமையறிந்தோ எனப் பாடமுள்ளது. கவனித்தல் தக்கது. மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (441) எச்சமில் பாங்கியி னச்சமிக் குரைத்தல் அஃதாவது தன்னையர் தந்தையர் தாமறிந்தோ வெனக் கவன்று அச்சமுற்றுரைத்த தலைவி போதலும், சூடலும் அளிசெய்யும் தலைவனிடத்து அத்தன்மையளா யிருக்கின்றனளென்று அலர் தொடுக்கும் வண்ணம் நீ இவ்வாறு இருந்தனையோ வென்று தோழி நீ யென்னை வினாவுகின்றாய் அந்தணர் என் விவாகத்திற்காகத் தீயைத் திகழ்வித்தற்கு முன்னரே யாஞ்செய்வகை யாதெனக் கூறாநிற்றல். | | விருந்தெனப் போந்தும் விரைமலர் சூட்டியு மிக்களிக்கும் | | | அருந்திற லான்வயி னன்னளென் றிவ்வூ ரலர்தொடுப்ப | | | இருந்தனை யோவென்று தோழி வினவுதி யென்னினிநாம் | | | திருந்திய செய்வகை தீமறை யோர்திகழ் விக்குமுன்னே. |
(இ - ள்.) என்றும் வராத விருந்தினராக வருதல் செய்தும், நறுமணமுள்ள மலர்களை யணிதல் செய்தும் மிகவும் கருணை செய்கின்ற அரிய வலிமையையுடைய தலைவன்பால் அத்தன்மையளாய் உள்ளனளென்று இவ்வூரின் கண்ணுள்ளார் பழிச்சொல்லினைத் தொடுக்கத் தோழியே நீ இருந்தனையோ வென்று வினவுகின்றனை. நாந்திருந்துதற் |