| கேதுவாகச் செய்யும் தொழிலை யாகாக்கினியிடத்து அந்தணர் திகழ்வித்தற்கு முன்னரே நாஞ்செய்யத்தக்கது இனியா தென்றன ளென்க. (வி - ம்.) அன்னள் - (ஒருவனிடத்துச் சேர்க்கையுற்றிருக்கும்) அத்தன்மையள். அலர் தொடுத்தல் - பழிச்சொற் சொல்லல். மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (442) நெறிப்படு நாட்டத்து நேரிழைத் தோழிக்கு முகிழ்ந்த கொங்கை நிகழ்ந்தவை மறைத்தல் அஃதாவது பாங்கியினிடத்து அச்சமிக் குரைத்த தலைவி உருவானது சாயலையும் கண்ணானது மதர்ப்பையும் தோளும் நுதலும் அழகினையும் பொருந்தினவென்று யான் துன்ப முழக்குங் காலத்து ஆராயும் கருத்தினையுடையாய் இனியவைகள் வந்து பொருந்துங் கவலை எனக்கின்றெனக் கூறாநிற்றல். | | மண்ணுங் கதிர்மணி போலுருச் சாயலு மாமதர்ப்புக் | | | கண்ணுங் கவின்பணைத் தோளு நுதலுங் கதுவினவென் | | | றெண்ணுங் கருத்தினை யின்னாங் குழக்கு மிடத்தினென்றான் | | | நண்ணுங் கவலை யெனக்கினி யின்று நறுநுதலே. |
(இ - ள்.) கழுவுதல் செய்த மணியொளி போன்ற வடிவம் மென்மைத் தன்மையினையும் பெரிய மதர்ப்பினைக் கண்ணும், மூங்கிலினை யொத்த தோளும் நுதலும் அழகினையும் பொருந்தின வென்று (நான்) துன்புழக்குங் காலத்து ஆராய்கின்ற கருத்தினையுடையாய் இருக்கின்றனை என்றால் நல்ல நெற்றியினையுடைய தோழியே (கெட்டொழிந்த) அவைகள் என்னை வந்து பொருந்துதற் கேதுவாகிய கவலை இனியெனக்கின்றென்றா ளென்க. (வி - ம்.) நெறிப்படு நாட்டம் - சுருங்கிய பார்வை. அஃதாவது அருகிப் பார்க்கும் பார்வை. மண்ணிய - கழுவிய. தோழியே யான் அழகு கெட்டுத் துன்புறுங்கால் உருவானது சாயலையும் கண்ணானது மதர்ப்பையும், கவினைத்தோளும் நுதலும் கதுவின வென்று நினைக்கும் கருத்தினை யுடையாய் ஆதலால் இனியெனக்குக் கவலையின்றென்றா ளென்க. தலைவன் தலைவியைக் கூடித் தோழியறியாமல் நீங்குதலால் தலைவிக்கு உருச்சாயன் முதலியன உண்டாயின. அவை தலைவனா னுண்டாகவில்லையென மறைத்துக் கூறுதல். மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (443) தமர்தற் காத்துழித் தன்னுளத் துரைத்தல் அஃதாவது தோழிக்குத் தலைவி நிகழ்ந்த செயல்களை மறைத்துக் கூறிக் காவலின் நம்மைப் புகுத்திய வன்னை அதனைப் புறக்கணித்து மனக்காவலோடு கூடிய இல்லின்றன்மையளாக இருக்க இன்று வைத்தனள். உயிர்வாழ்த லெங்ஙனம் ? தலைவரும் மேகஞ் சூழ்ந்த வரையின் பக்கத்து ஆராய்வனவற்றை ஆராய்கின்றில ரெனக் கூறாநிற்றல். |